தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் முதலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!- மனோ கணேசன்!

கிளிநொச்சியில் விபத்து: மூவர் படுகாயம்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 09:36.19 AM GMT ]
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில்  படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி பகுதியில் உழவு இயந்திர பெட்டி தடம்புரண்டதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் விஜயசேகரம், சுப்பிரமணியம், கிறிஸ்ரி ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw5.html

பண்டாரவளை எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சியில் இணைவு
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 10:06.14 AM GMT ]
பண்டாரவளை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் சச்சிதானந்தன் சுரேன் கண்ணா ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியுடன் இணைந்து கொண்டார். 
ஐ.தே.க. வைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுரேன் கண்ணா அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைய இணக்கப்பாட்டினை தெரிவித்தார்.
இவர் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற பண்டாரவளை பிரதேச சபை தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.
அத்துடன் ஐ.தே.க கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க இளைஞர் அமைப்பில் முக்கிய பதவியையும் இவர் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சச்சிதானந்தன் சுரேன் கண்ணா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளதுடன் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவை வெற்றியடைய வைக்க பூரண பங்களிப்புக்களை வழங்கப் போவதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw6.html

ஜனாதிபதி தேர்தல்! இதுவரை 9 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 10:24.06 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.
ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்ன, ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லே, சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க ,எக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ பர்ஸி மஹேந்திரவும, ஐக்கிய மக்கள் மகாசபா கட்சியின் சார்பில் கலாநிதி நாத் அமரநாத்தும், இலங்கை தேசிய முன்னணியின் சார்பில் விமல் கீகனகே, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பள்ளேவத்தே கமராலகே மைத்திரிபால, சுயேட்சையாக ஐ.எம். இல்யாஸ் ஆகியோரே இத்தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 9 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர். இந்த தேர்தலுக்காக 7ம் திகதி நண்பகல் வரை மட்டுமே கட்டுப்பணம் செலுத்த முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw7.html

மாட்டுவண்டியில் ஆற்றைக் கடக்க முயன்றவர் பரிதாப மரணம்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 10:26.11 AM GMT ]
திருகோணமலை கிண்ணியா கிரான் பகுதியிலுள்ள சாவாற்றில் மூழ்கி காணாமற்போனவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஓட்டிச் சென்ற மாட்டுவண்டி, நேற்று சாவாற்றில் விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆற்றைக் கடக்க முற்பட்ட வேளையில், இரண்டு மாடுகளுடன் வண்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட வண்டியையும், மாடுகளை காப்பாற்ற முற்பட்ட இருவரில் ஒருவர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மகாமாறுக் கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.  மாட்டு வண்டி நீரில் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலிருந்து இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன. வண்டியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் இரண்டினது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkxy.html
புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் முதலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்!- மனோ கணேசன்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 10:44.17 AM GMT ]
அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசு, ஜனாதிபதி முறைமையை அகற்றி விட்டு, 18ம் திருத்தத்தை ஒழித்து, 17ம் திருத்தத்தை மீண்டும் அரசியலமைப்பில் சேர்த்த பின், முதல் பிரச்சினையாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தேட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 
இதை நான் நேற்று ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு விளங்கும் விதமான உரக்க சிங்கள மொழியில் இவர்களின் முகங்களை பார்த்தே பகிரங்கமாக சொன்னேன். அதை இங்கே மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பொது எதிரணி கோட்பாடுகளில், இன்று இனப்பிரச்சினை இல்லை. ஜனாதிபதி முறைமை, 18ம், 17ம் திருத்தங்கள் ஆகியவை அகற்றப்படுவது பற்றியே பேசப்பட்டுள்ளன. நாம் இன்று இவற்றுக்கு தடையாக இருக்கவில்லை.
ஆகவே இனப்பிரச்சினை தீர்வை ஒரு நிபந்தனையாக நாம் இன்று முன்னிறுத்தவில்லை. ஆனால், அதற்காக இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
இதற்கான தீர்வு தேடல்தான் தமிழ், முஸ்லிம் மக்களின் முதன்மை தேவை. ஞாபகப்படுத்துகின்றேன் என அவருக்கு நான் தோழமையுடன் கூறுகிறேன்
குடும்ப ஆட்சி, நண்பர்- உறவினர்களுக்கான பொருளாதார கொள்கை, சட்ட ஆட்சியின் வீழ்ச்சி, ஊழல், வீண் விரயம், ஊடக ஒடுக்குமுறை, குற்றம் செய்யும் சிலருக்கு கிடைக்கும் பாதுகாப்பு ஆகியவை ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமென நாங்களும் விரும்புகிறோம்.
ஆகவே அதற்கான தேசிய போரட்டத்தில் நாங்களும் இருக்கின்றோம். ஆனால், அதைவிட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எங்களுக்கு முக்கியம். எங்கள் பட்டியலில் அதற்குதான் முன்னுரிமை தருகிறோம்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkxz.html

Geen opmerkingen:

Een reactie posten