[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 10:53.51 AM GMT ]
பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் மக்களுக்கு குறிப்பாக சிறார்களுக்கு எவ்விதமான உதவிகளும் வழங்கப்படாமலிருப்பதனையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், எஸ்.சுகிர்தன் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.சஜீவன் ஆகியோரும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சேந்தாங்குளம் முகாம் மற்றும் தெல்லிப்பளை ஆகிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது மக்கள் கூட்டமைப்பினருக்கு கூறுகையில்,
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு எமக்கான உதவிகளை வழங்குவதில் அதிகாரிகள் அக்கறையற்றிருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியிருப்பதுடன், வீடுகளுக்குள் தண்ணீர் ஊறியிருப்பதனால் படுத்துறங்க முடியவில்லை. எமக்கு பாய் மற்றும் சாக்கு போன்றன உடனடியாக தேவை.
மேலும் சிறுவர்களுக்கு பால்மா மற்றும் உணவுப் பொருட்கள் தேவை ஆனால் அவை உரியமுறையில், உரிய அளவில் எமக்கு வழங்கப்படவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியான உதவிகளை எமக்கு வழங்குங்கள் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து கூட்டமைப்பினர் குறித்த பொருட்களை தாமும் பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நேரில் சந்தித்து மக்களுடைய தேவைகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருப்பதுடன், நிவாரண உதவிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkx0.html
மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய இளைஞர்களை ஒரு வாரத்திற்குள் சரணடையுமாறு உத்தரவு
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 11:27.02 AM GMT ]
ஆனால் கைதுசெய்யப்பட்டவர்கள் தவிர்ந்த மீதம் 8 இளைஞர்கள் தலைமறைவாகியிருக்கின்றனர்.
கடந்த மாதம் 27ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் தினம் உலகில் பல நாடுகளில் அனுட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்.குடாநாட்டில் பலத்த கெடுபிடிகளும் போர்க்கால நிலைமைக்கு ஒத்ததான படைக்குவிப்பும் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பொற்பதி வீதியின் முடிவில் உள்ள கிராமத்தில் அன்றைய தினம் மாலையில் கூடிய இளைஞர்கள் சிலர் மாவீரர் தினம் அனுட்டிக்கும் வகையில்,
தீபங்களை எற்ற முற்றட்ட நிலையில் அப்பகுதியால் ரோந்துவந்த படையினர் கண்டுள்ளனர்.
தீபங்களை எற்ற முற்றட்ட நிலையில் அப்பகுதியால் ரோந்துவந்த படையினர் கண்டுள்ளனர்.
எனினும் அவர்கள் உள்ளே வருவதற்கு முன்னதாகவே இளைஞர்கள் தீபத்தை அணைத்துவிட்டு விளக்கை ஒழித்து விட்டனர்.
இதனையடுத்து படையினர் அங்கிருந்து விலகிச் சென்ற நிலையில் படையினர் போய்விட்டனர். என ஊகித்துக் கொண்ட இளைஞர்கள் மீண்டும் தீபத்தை ஏற்றியிருக்கின்றனர்.
ஆனால் குறித்த இளைஞர்கள் ஏதோ செய்யப் போகின்றார்கள். என்பதை ஊகித்துக் கொண்ட படையினர் அங்கிருந்து விலகிப் போவது போன்று போய்விட்டு மீண்டும் வந்து அதே பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் தீபம் ஏற்றப்பட்டதும் அந்தப் பகுதியை படையினர் சுற்றி வளைக்க படையினரைக் கண்ட இளைஞர்கள் ஓடியுள்ளனர். எனியும் 3 இளைஞர்கள் படையினரிடம் அகப்பட்டுவிட்டனர்.
நேராக குறித்த இளைஞர்களின் பெற்றோரிடம் சென்ற படையினர் பிள்ளைகளை தாம் கொண்டு செல்வதாக கூறியதுடன், இந்த விடயம் வெளியே தெரியவந்தால் அதன் விளைவுகளுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் கூறிய நிலையில் பெற்றோர் அமைதியாக இருந்துவிட்டனர்.
இந்நிலையில் படையினர் கொண்டுசென்ற 3 இளைஞர்களும் நேற்றைய தினம் அவர்ளுடைய வீடுகளுக்கு செல்ல அனுமதித்துள்ள படையினர், அவர்கள் மூவரும் தம்முடன் சேர்ந்து விளக்கேற்றிய மற்றைய 8 இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வாரத்திற்குள் படையினரிடம் மீள சரணடையவேண்டும் என படையினர் தமக்கு பணித்திருப்பதாக தமக்கு நெருங்கிய வட்டத்தினரிடம் கூறியிருக்கின்றனர்.
ஆனால் அவர்களுடன் சேர்ந்து விளக்கேற்றிய மற்றைய இளைஞர்கள் 8 பேரும் தற்போது தலலைமறைவாகியிருக்கும் நிலையில் குறித்த 3 இளைஞர்களும் செய்வதறியாத நிலையில் நிற்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkx2.html
Geen opmerkingen:
Een reactie posten