[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 08:26.45 AM GMT ]
கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம், மட்டக்களப்பிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், மட்டக்களப்பு மாவட்ட வலது குறைந்தோர் அமைப்புக்கள் உள்ளிட்டவை இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தின.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம், மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபம் வரை சென்றதுடன் அங்கு கண்காட்சி மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட சமூகசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர் அருள்மொழி அதன் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடையோரின் பாடசாலைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திகள் கொண்ட கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டதுடன் புகைப்படக்கண்காட்சியினையும் அதிதிகள் பார்வையிட்டனர்.
தேசிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw3.html
காப்பியங்களில் வென்றது போல இலங்கையில் சபதம் வெல்லுமா?
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 09:19.34 AM GMT ] [ வலம்புரி ]
பெண்கள் சபதம் எடுத்தால் ஆண்கள் சும்மா இருப்பார்களா என்ன? திரெளபதியின் சபதத்தோடு பாண்டவர்களும் சபதம் எடுக்கின்றனர். அச் சபதமே குருசேத்திரப் போரும் கெளரவர்களின் தோல்வியுமாயிற்று.
பொதுவில் காப்பியங்கள், இதிகாசங்களில் இடம்பெற்ற யுத்தங்களின் பின்னணியில் சபதங்கள் இருந்துள்ளன.
அந்தச் சபதங்கள் வெற்றி பெற்றதான வரலாறுகளும் உண்டு. இராமாயணத்தில் அசோகவனத்தில் இருக்கும் சீதையை அனுமன் சந்திக்கின்றான்.
சீதா தேவி அம்மையே! என்னோடு வாருங்கள். நான் உங்களை என் முதுகில் ஏற்றிக் கொண்டு செல்கிறேன் என்றான்.
அதற்கு சீதை மறுப்புத் தெரிவிக்கிறாள். அனுமனின் கோரிக்கைக்கு சீதை மறுப்புத் தெரிவிக்காவிடின் இராமாயணக் காப்பியம் அத்தோடு முடிந்திருக்கும். இலங்கையும் அழிவுற்றிருக்காது.
எனினும் அனுமனின் வேண்டுதலை சீதை நிராகரித்து விடுகிறாள். இந்த நிராகரிப்புக்கு காரணமும் கூறப்படுகிறது.
அசோகவனத்தில் இருக்கும் தன்னை அனுமன் காப்பாற்றிச் சென்றால் அது இராமரின் புகழுக்கு பங்கமாகும். எனவே தன்னை இராமரே மீட்க வேண்டும் என்பது சீதையின் சபதம்.
சீதையை இராமர் மீட்பது என்றால் நோர்வே தூதுவரா இராவணனோடு சமாதானப் பேச்சு நடத்த முடியும்? ஆக இராவணனை வதம் செய்தால் மட்டுமே அசோகவனத்தில் இருக்கும் சீதையை மீட்க முடியும்.
இராவணன் தன்னைக் கடத்திச் சென்ற தோசத்தை அனுமன் நீக்குவது முறையன்று.
அதனை தன் இராமனே நீக்கவேண்டும் என ஜனகன் மகள் நினைத்ததில் நிறையவே நியாயம் உள்ளது.
அதாவது இராவணனைக் கொன்றாக வேண்டும் என்று முடிவாகி விட்டால், சீதை இந்த முடிவைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இவை ஒரு புறம் இருக்க, சீதையை மீட்பதற்கான போர் இலங்கையில் நடக்கிறது. போரில் இராவணேஸ்வரன் மாண்டு போகிறான். அவன் மாண்டதால் மண்டோதரியும் உயிர் விட்டாள்.
இவை நடந்த பின்னர் சிறையில் இருக்கும் சீதையை இராமரே சென்று அழைத்து வரவேண்டும் அல்லவா? ஆனால் அதுதான் நடக்கவில்லை.
சிறையில் இருக்கும் சீதையை அழைத்து வரும் படி இராமர் விபூஷணனிடமே கூறுகிறார். விபூஷணனே சீதையை அழைத்து வருகின்றான் என்பது இராமாயணக் கதை.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பது என்று சந்திரிகா சபதம் செய்துள்ளார்.
இச் சபதத்தை பாண்டவர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, மனோ கணேசன் என்ற ஐவரும் நிறைவேற்றியாக வேண்டும்.
அல்லது, இராமாயண நெறியில் விபூஷணன் என்ற மைத்திரிபால சிறிசேன, இங்கு சீதையாக உவமிக்கப்படும் சந்திரிகா, மகிந்தவின் ஆட்சியில் இழந்து போன கெளரவங்களை மீட்டுக் கொடுக்க வேண்டும்.
சபதங்கள் காப்பியங்களில் வென்றுள்ளன. இலங்கையில் எப்படி? என்பதை பொறுத்திருந்தே பார்க்கலாம்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw4.html
Geen opmerkingen:
Een reactie posten