தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்: அரசாங்கம் - தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை!

இலங்கைக்கு விசாரணைக்குழுவை அனுப்ப இன்னும் தீர்மானம் இல்லை!- இந்தியா
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 02:44.12 PM GMT ]
தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்பில் இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த தேசிய விசாரணை நிறுவன அதிகாரிகளை அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் குறித்த விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு இன்னும் அனுமதிக்காமையே இதற்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை இந்திய அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, குறித்த விசாரணைக் குழுவை ஒருநாடு மற்றும் ஒரு நாட்டுக்கு அனுப்ப முடியும்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தின் பின்னணியில் கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் முன்னாள் வீசா அதிகாரி அமீர் சுபைர் சித்தீக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சென்னையில் வைத்த சகீர் ஹுசைன் என்ற இலங்கையர்; கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkx6.html

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்: அரசாங்கம் - தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 02:14.37 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தநிலையில் அந்தக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதில் தொடர்பில் தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது கிழக்கு மாகாணசபை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலகிச் சென்றமை குறித்து அரசாங்கம் கவலையடைவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டார்.
தனியான முஸ்லிம் மாவட்டத்துக்கு ரணில், மைத்திரி உடன்பாடு இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லி;ம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ள கிழக்கின் முஸ்லிம் தனிமாவட்ட கொள்கையை ரணில் விக்கிரமசிங்கவும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நிராகரித்துள்ளனர்.
இந்த செய்தியை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியளித்துள்ளதாக குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkx5.html

Geen opmerkingen:

Een reactie posten