[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 07:32.26 AM GMT ]
மீரியாபெத்த மண்சரிவுக்கு பின்னர் மலையக மக்களுக்கு தனி வீடு அமைக்கப்படவேண்டுமென அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளாலும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இக்கருத்துக்கள் பாராட்டத்தக்க விடயமாகும் இந்தியா அரசாங்கத்தால் 4000 வீடுகள் வழங்குவதாக கூறப்பட்டது. அதற்கு என்ன நடந்தது என தெரியவில்லை
அதன் பின் ஐம்பதாயிரம் வீடுகள் அமைக்கபடவுள்ளதாக தகவல் பரவியதுடன் மலையக அரசியல்வாதிகள் பகுதி பகுதியாக சென்று பிரச்சாரம் செய்ததுடன் தொழிற்சங்க தலைவர்களுக்குமிடையில் முரன்பாடுகள் ஏற்பட்டது.
தான் பிடிக்கும் முயலுக்கு முன்று கால்கள் என நினைத்துக்கொண்டு மலையகத்தில் நாங்கள்தான் ஜாம்பவான்கள் என மார் தட்டிக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் நாம் இன்றே வேலைகளை ஆரம்பிக்க போகின்றோம் என கூறியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள்.
மலையகத்தில் தனி வீடு அமைத்தால் அதிகமான தேயிலை செடிகள் பாதிக்கப்படும் இதனால் எதிர்காலத்தில் மலையக மக்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என ஓரு சாரார் கூற, மற்றவர்கள் தனி வீடுதான் அமைக்கவேண்டும் என கோசம் எழுப்புவதோடு விவாதங்களையும் அரசியல் மேடைகளில் அரங்கேற்றினாலும் மக்களுடைய எதிர்பார்ப்பு 20 பேர்ச் காணியும், தனிவீடும் தான் என்பதனை எமது அரசியல் வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தனி வீடு வேண்டும் என்பதற்கு மக்களிடையே பல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
குறிப்பாக சில பகுதிகளில் லயன் காம்பிராக்கள் உடைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாடி வீடு அமைக்கப்பட்டது. ஆனாலும் அம்மக்கள் வாழ்ந்த பழைய வீடுகளில் வசதிகளுடன் தான் வாழ்ந்தார்கள்.
இதனை விட அதிக வசதிகளுடன் நீங்கள் வாழ போகின்றீர்கள் என ஆசை வார்த்தைகளை கூறி மாடி வீட்டு திட்டத்தினை ஏற்படுத்தி அதில் வாழ வழி செய்தனர்.
வீட்டுக்கான ஒரு தொகை பணத்தினையும் மாதாந்த சம்பளத்தில் அறவிட்டனர். இதனையும் ஏற்றுக்கொண்ட இம்மக்கள் மாடி வீட்டில் வாழ ஆரம்பித்து இன்று மன நிம்மதி அற்ற நிலையில் வாழ்வதோடு இருந்த வசதிகளையும் இழந்து அழுது புலம்பும் மக்களாக வாழ்கின்றனர்.
அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதைதான் இது. மாடி வீடுதான் இம்மக்களுக்கு சரியான திட்டமா என கருத்துக்களை மக்களிடம் கேட்டறிய வேண்டும். ஆனால் எந்த அரசியல் வாதிகளும் அதனை கேட்டறிந்ததில்லை.
இவ்வாறாக புலம்புகின்றவர்கள் தான் லிந்துலை திஸ்பனை தோட்ட மக்கள் .மாடி வீடு என்ற பெயர் மட்டும் தான் ஆனால் எவ்வித வசதிகளும் இவ்வீட்டில் இல்லை. தற்போது 20 பேர்ச் காணி தொடர்பாக பேசுகின்றார்கள்.
எங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பது 20 பேர்ச் காணிதான். நீட்டி படுப்பதற்கு கூட இடம் இல்லாமல் தவிக்கின்றோம் காரணம் 5 முதல் 10 பேர் வரை ஒரே படுக்கை அறையில் நித்திரை கொள்கிறோம்.
விருந்தினர்கள் வந்துவிட்டால் இவர்களை எவ்வாறு சமாளிப்பது என்பதும் கவலையான விடயம் தான் வீட்டுக்கு முன்னால் 1 அடி நிலம் கூட இல்லை.
ஒரு வீட்டில் அடுப்பு எரிக்க ஆரம்பித்துவிட்டால் அனைத்து வீடுகளிலும் புகை மண்டலம் தான் உடைகளை கழுவி காயவைப்பதற்கு கூட ஒரு இடம் இல்லை.
வீட்டில் கீழ் மாடியில் இருந்து மேல் மாடிக்கு செல்லும் படி மோசமான முறையில் ஒரு கால் வைக்கும் அளவுக்குத்தான் காணப்படுகின்றது. அது மட்டும் அல்லாமல் குடிப்பதற்கு, குளிப்பதற்கு வீடுகளில் சவர் பொருத்தப்பட்டிருந்த போதிலும் வீடு திறப்பு விழா செய்யும் போது மாத்திரம் அதில் தண்ணீர் வந்தது.
ஆனால் தற்போது ஒரு குடம் தண்ணீருக்காக 1 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள ஒரு குழாயில் வடியும் சொட்டு தண்ணீருக்காக பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். மலசல கூடங்கள் இருக்கின்ற போதிலும் கழிவு நீர் செல்லும் குழாய் சரியான முறையில் பொருத்தப்படாமல் சிக்கல் நிலையில் இருக்கின்றது.
வீட்டுக்கு முன் உள்ள வீதி மழை காலங்களில் சேரும், சகதியுமாக கால் வைக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்கையில் இறந்தவர்களின் உடலை வீடுகளில் வைக்க முடியாமல் அவர்களின் இறுதி கிரியைகளை வீட்டில் செய்ய முடியாமல் இருப்பதுதான் இம்மக்களின் வாழ்க்கையின் பாரிய இடி கல்லாகும்.
எமது மலையக அரசியல் தலைவர்கள் சுப போக வாழ்க்கை வாழ்பவர்கள்.
1 நாள் இம்மக்களோடு இருந்து பார்த்தால் இம் மக்களின் வருத்தம் புரியும். எனவே மாடி வீடு தொடர்பாக பேசுகின்றவர்கள் இது தொடர்பாக பேசாமல் இருப்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw1.html
கிழக்கு மாகாணசபை முதலமைச்சருக்கு மட்டும் சொந்தமல்ல! மு. இராஜேஸ்வரன் மா.உ - மரணம் தவிர்க்க முடியாது: ஜனா
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 07:55.24 AM GMT ]
கிழக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தமிழ்மக்களுக்கான தேவைகளை புறக்கணித்து பக்கச்சார்பாக நடைபெறுதாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் மீதான உரையின் போது இராஜேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்.
கிராம அபிவிருத்திக்கென நீங்கள் ஒதுக்கியுள்ள நிதியில் இம்முறையும் கடந்த ஆண்டுகளைப் போல தமிழ் பிரதேசங்களை புறக்கணிப்பீர்கள் என்றே தோன்றுகிறது.
எதுவானாலும் மூவினங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதுதான் தமிழ்த் தேசிய கூட்டமைபின் நிலைப்பாடும். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் தொடச்சியாக தமிழ் பிரதேசங்களை புறக்கணிக்கபடுகிறது. இதனை பல முறை சுட்டிக்காட்யிருந்தும் எந்த வகையிலும் யாரும் செவிசாய்த்ததாய் தெரியவில்லை.
மூவீனங்களையும் சமத்துவமாக பேணுபவர்கள் என்றும் அதுவே ஜனாதிபதியின் செயற்பாடு என்றும் அடிக்கடி கூறி வருகின்றீர்கள். ஆனால் உங்கள் எல்லோரினதும் செயற்பாடுகள் தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவே இருக்கிறது. ஆனால் தமிழர்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.
அம்பாறை மாவட்டத்தில் இரண்டு தமிழ் பிரதேசங்கள் 2015ம் ஆண்டு திட்டத்தின் கீழ் இம்முறை தெரிவு செய்யப்படவேண்டும். கடந்த ஆண்டுகளில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு சிங்கள முஸ்லிம் பிரதேசங்கள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருந்தது இங்கு சுட்டிகாட்டத்தக்கது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் நீண்ட காலமாக இயங்கி வந்த வாகன தரிப்பிடம் மூலம் பெறப்பட்ட வருமானம் வைத்தியசாலைக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை செய்து கொண்டிருந்தது. ஆனால் கல்முனை மாநகர சபை திட்டமிட்டு தரிப்பிடத்தை கல்முனை கார் மேல் பற்றிமா பாடசாலையின் நுழைவாயிலுக்கு முன்பாக மாற்றியமைத்ததனால் அவ்விடத்தில் ஏற்படும் வாகன நெரிசலால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் கல்முனை தமிழ் பிரதேசங்களை தொடச்சியாக புறக்கணித்து வரும் கல்முனை மாநகர சபை, வாகன தரிப்பிடத்தின் மூலம் வரும் வருமானத்தை சுருட்டிக்கொண்ட செயற்படானது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 2014.02.11 அன்று கிழக்கு முதலமைச்சர் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்திருதேன். நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் உறுதியளித்தும் இன்றுவரை எந்த மாற்றமும் நடைக்கவில்லை.
முதலமைச்சர் சில அதிகாரிகளின் ஆலோசனையை கேட்டு தமிழ் மக்களுக்கு பாதிப்பு வரும்வகையில் செயற்படுவதாகவே தோன்றுகிறது.
அது மட்டுமின்றி கல்முனை மாநகரசபையானது கல்முனை தமிழ் பிரதேசங்களை திட்டமிட்டு&nb புறக்கணித்தே செயற்படுகிறது. கல்முனையின் தமிழ் பிரதேசங்களையும் முஸ்லிம் பிரதேசங்களையும் கண்கூடாக பார்க்கும் போது அனைவரும் வித்தியாசத்தினை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
தமிழ் பிரதேசங்கள் பல இன்றும் இருளில் மூழ்கியே காணப்படுகிறது. குப்பைகள் அகற்றும் மாநகரசபை வாகனங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு ஒழுங்கு முறைப்படி செல்லாததால் குப்பபைகள குவிந்து காணப்படுகிறது. வடிகால் அமைப்புகளும் சீர் இல்லாததால் மழை நீரும் தேங்கி நின்று தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.
மரணம் தவிர்க்க முடியாது: கிழக்கு மா.உ கருணாகரம்
மரணம் தவிர்க்க முடியாது ,ஆனால் தள்ளி வைக்கலாம் என்பார்கள். கிழக்கு மாகாணசபை வரவு செலவுத் திட்ட விவாத முதல் நாள் ஒத்திவைக்கப்பட்டமையும் வாக்கெடுப்பு தினத்தில் வாக்கெடுப்புக்கு விடாது சபையை ஜனவரி 15ம் திகதிக்கு ஒத்தி வைத்தமையும் இதனையே உணர்த்துகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை அரசியலில் யாருமே எதிர்வு கூறாத, யாருமே எதிர்பாராத திருப்பம் மாபெரும் சுனாமி பேரலையை தோற்றுவித்துள்ளது.
இந்த பேரலையின் தாக்கம் அசைக்க முடியாது என்று நம்பிய பலமான அத்திவாரத்தையே அசைத்து விட்டது போன்ற தோற்றத்தை தெளிவாக உணர்த்தி விட்டது. ஊவா மாகாண சபை தவிர்க்கமுடியாத குளிரால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, மேல் மாகாண சபை உறுப்பினர்களின் ஆவேச உரைகளின் உஸ்ணம் தாங்க முடியாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, கிழக்கு மாகாண சபையோ ‘செவ்கோல்’ காரணம் காட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காரியத்துக்கு காரணம் கூற முடியாது என்பதே யதார்த்தம். உண்மையில் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட இடப் பெயர்வு அச்சம் அவர்களது பேரம் பேசல்களின் கடினத்தன்மை, இவற்றை தடுக்க, தவிர்க்க முடியாத ‘கையறு’ நிலையே இதற்கான உண்மைக்காரணம் என்பதே திறந்த இரகசியம்.
எவ்வாறோ தற்போதைய கள நிலவரம் மத்தியிலும் மற்றும் மேல், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், தவிர்க்க முடியாது என்பதையும் மாற்றத்தை தள்ளி வைக்க மாத்திரமே முடியும் என்பதையுமே உணர்த்துகின்றது. தள்ளி வைக்கும் முயற்சி கூட காலம் கடந்த ஞானம் போலவே தெரிகின்றது.
நடக்கும் சம்பவங்கள் நமக்கு கிதாசாரத்தையே ஞாபகப்படுத்துகின்றது. அதுதான் “ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” போலவே தெரிகிறது. நம்பிக்கை ஒன்றுதானே நம் வாழ்வின் ஒளிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw2.html
Geen opmerkingen:
Een reactie posten