தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-வவுனியா ரயில் விபத்தில் இளைஞர் பலி

திஸ்ஸவின் போலி ஆவணம்! தனது கையெழுத்தல்ல என்கிறார் ரணில்! விசாரணை ஆரம்பம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:35.25 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் இடையில் இரகசிய ஒப்ப்ந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகக் கூறி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சமர்ப்பித்த போலி ஆவணங்கள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், எழுத்து மூலமான ரணிலின் முறைப்பாட்டின் மீது தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இந்த முறைப்பாட்டையடுத்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றத் தடுப்புப் பணியகத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அது என்னுடைய கையெழுத்து அல்ல
பொதுஎதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நான் செய்­துள்­ள­தாக கூறப்­படும் இர­க­சிய உடன்­ப­டிக்கை பொய்­யா­னது. உடன்­ப­டிக்­கையில் இடப்­பட்­டுள்ள கையெ­ழுத்து என்­னு­டை­யது அல்ல என தெரி­விக்கும் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளேன்.
அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்
பொது எதி­ர­ணியின் மீது அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்தி வரு­கின்­றது. இப்­போதும் பொது எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்­றினை கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­வித்­துள்ளார்.
திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­விப்­பதைப் போல் எனக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் இடையில் எந்­த­வொரு இர­க­சிய உடன்­ப­டிக்­கையும் இல்லை. இர­க­சி­ய­மாக உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளவும் இல்லை.
அர­சாங்கம் எம் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து அவர்­களின் தோல்­வி­யினை தடுத்து நிறுத்தும் முயற்­சி­யொன்­றி­னையே மேற்­கொண்­டுள்­ளனர்.
அதேபோல் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக வெளிப்­ப­டுத்­திய உடன்­ப­டிக்­கையில் இருப்­பது எனது கையொப்­ப­மில்லை.
பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து என் மீது குற்றம் சுமத்­து­கின்றார். எனவே இதற்கு எதி­ராக நான் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்ளேன்.
தற்­போது இவ் அர­சாங்­கத்தின் எம் மீதான பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளேன்.
எனது கையொப்­ப­மென பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து எம் மீது குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு திஸ்ஸ அத்­த­நா­யக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கையொப்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு என் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiwz.html

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மக்களுக்கு நிவாரணம்- வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் விசேட சுகாதார நடவடிக்கைகள்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:43.03 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் பட்டிப்பளை மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான படுக்கை விரிப்புகள் மற்றும் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் எட்டு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 1200 குடும்பங்களுக்கும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஆறு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 800 குடும்பங்களுக்கான பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாகச்சென்று இந்த பொருட்களை வழங்கிவைத்தார்.
இதன்போது முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் முகாம்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.
அத்துடன் முகாம்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொடுக்கவும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் பிரதியமைச்சர் மேற்கொண்டார்.
மட்டக்களப்பில் வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் விசேட சுகாதார நடவடிக்கைகள்
வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதிகளில் சுகாதார பிரிவுகளினால் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட வாகரையில் உள்ள முகாம்களில் சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தலைமையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் சந்திரமோகன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வாகரை பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள முகாம்களில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.
இதன்போது முகாம்களில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் வயோதிபர்கள் தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 36 வாரங்களைக்கொண்ட கர்ப்பிணிப்பெண்கள் முன்னெச்சரிக்கையாக வாகரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் உடல் நிலைகளைப்பொறுத்து வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன. அத்துடன் முகாம்களில் உள்ள குடிநீர்கள் மற்றும் மலசல கூடங்களில் சுகாதார நிலைமைகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரையில் எதுவித தொற்று நோய்களோ,வேறு நோய்களோ ஏற்படவில்லையெனவும் வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எஸ்.திசாநாயக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw0.html
ஆகும் காலத்தே ஆகும்! அவை போகும் காலத்தே போகும்!
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 04:57.58 AM GMT ]
இறைவனின் திருவிளையாடல்கள் எத்தன்மையவை என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்தப் பிறவி போதாது என்றே கூறவேண்டும். அந்த அளவிற்கு அவனின் பெருவிளையாட்டு இந்தப் பூமியில் நடந்தேறுகிறது.
இராவணனை அழிப்பதற்காக திட்டம் தீட்டிய இறைவன் கைகேகியின் மனநிலையை மாற்றுகிறான். அகலிகைக்கு சாப விமோசனம் கொடுக்க நினைத்தவன் இராமனை அவ்விடம் செல்லப் பணிக்கின்றான்.
ஆக, ஆவதற்கும் அழிவதற்கும் அவனே காரணமாக இருக்கின்றான் என்பதை ஒரு போதும் மறுதலிக்க முடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.
கெடுகாலம் மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா? என்று ஒரு சம்பிரதாயத்திற்கு உயர்நீதிமன்றிடம் ஆலோசனை கேட்க, நீதிமன்றமும் தாராளமாகக் கேட்கலாம் என்று பதிலளிக்க, ஆட்சிக் காலம் முடிவதற்கு முன்னதாகவே இதோ! ஜனாதிபதித் தேர்தலை நடத்துகிறேன் பார் என்று உசார் அடைந்தார் மகிந்த ராஜபக்ச­.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற மன உந்துதலை மகிந்த ராஜபக்­சவிடம் ஏற்படுத்திய சக்தி இருக்கிறதே! அது பற்றி நாம் சற்றேனும் சிந்திக்க வேண்டும்.
அட, இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக இருக்க முடியும். அப்படி இருந்தும் ஏன்? இந்த அவசரம் என்பதை ஆற அமர்ந்து யோசித்தால் அந்த இறைவனின் திருவிளையாடல் அன்றி வேறு எதுவும் இல்லை என்ற உண்மை தெரிவரும்.
அவசரப்பட்டு தேர்தலை நடத்த, உள்வீட்டில் இருந்தவரே ஜனாதிபதி வேட்பாளராக வெளிவருகிறார்.
கூடவே இருந்த பலர் ஐயா! உங்களோடு இருந்தது போதும், இனிமேல் ஆகாது என்று கூறி விட்டு வெளியேறுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­ச முதற் தடவையில் வென்ற போது அவரோடு நின்றவர்கள்; இரண்டாவது தடவையும் அவர் ஜனாதிபதியாகிய போது, சரத் பொன்சேகாவை கட்டி இழுத்துச் சென்ற வேளை கைதட்டி மகிந்தவை உற்சாகப்படுத்தியவர்கள் இப்போது எங்கே?
அட, இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் ஆகும் காலத்தே அவை அவையாகும். போகும் காலத்தே பொன், பொருள், புகழ் எல்லாம் போகும் என்று சொன்னாரோ! என்று எண்ணத் தோன்றுகிறது.
எதுவாயினும் தேர்தல் இன்னமும் நடந்து முடியவில்லை என்பதால் எதிர்வு கூறல்களை முன்வைப்பது அவ்வளவு நல்லதல்ல.
எனினும் இரண்டு வருடகாலம் இருக்கும் போது அதற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தியதால் ஏற்படக் கூடிய மன உளைச்சல் மைத்திரியை விட மகிந்த ராஜபக்ச­வுக்கே அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேசமயம், தேர்தலில் தோல்வி உற்றால் உடனடியாகவே பதவி விலகி வென்றவரிடம் ஆட்சியை ஒப்படைப்பேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ கூறியிருப்பது அவரின் மனச்சஞ்சலத்தைக் காட்டுவதாகும்.
இது தவிர, தேர்தலில் தோற்றால் உடனடியாகவே ஆட்சியை ஒப்படைப்பேன் என்று கூறுவது, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகாவுக்கு நடந்தது தனக்கும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கான முன்னேற்பாடு என்று கருதினால் கூட, அதைத் தவறான எதிர்வு கூறலாக எவரும் நினைக்க முடியாது.
எதுவாயினும் நமக்குத் தெரிந்த சிற்றறிவின்படி ஆகும் காலத்தே அவை ஆகும். போகும் காலத்தே பொன், பொருள், புகழ் எல்லாம் போகும் என்பது மட்டுமே நிஜம்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw1.html
பொலிஸாரின் உடந்தையுடன் மைத்திரிபாலவின் பிரசார மேடை மீது துப்பாக்கிப் பிரயோகம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 05:01.59 AM GMT ]
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றின்மீது நேற்றிரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய - உமஹிலிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மேடை பகுதியில் இருந்து 15-20 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபாலவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
இந்நிலையில் வேன் ஒன்றில் சென்ற குழுவினர் மேடையை நோக்கியும் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த இடத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் முன்னலையில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ரோந்து வாகனமும் அங்கிருந்தமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்லும் வரை அங்கிருந்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே குறித்த மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் எதிர்ப்பார்ப்பதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடமையை நிறைவேற்றத் தவறிய மற்றும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உடந்தையாக இருந்தமை தெரியவரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw2.html

மட்டு. ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞன் உயிரிழப்பு! இன்று சடலம் மீட்பு!
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 05:11.19 AM GMT ]
மட்டக்களப்பு - வீச்சுக்கல்முனையிலுள்ள தனது வீட்டிலிருந்து துவிச்சக்கரவண்டியில் மட்டக்களப்புக்கு சென்ற இளைஞன் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 
வீச்சுக்கல்முனையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் வினோதன் என்ற 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் இன்று புதன்கிழமை காலை விமானப்படையினர் மற்றும் பொது மக்களால் மீட்கப்பட்டது.
நேற்றைய தினம் இரவு தேடப்பட்ட போதும் இன்றைய தினம் காலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு வலையறவு வீதியில் ஆற்று நீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வீதியூடான மட்டக்களப்புக்குச் செல்ல முயன்ற போதே அவர் நீரில் விழுந்துள்ளார்.
குறித்த வீதியால் ஓடும் வெள்ளத்தில் பல துவிச்சக்கர வண்டிகள் வீழ்ந்து மீட்கப்பட்டுள்ளதுடன் ஆபத்தான முறையிலேயே அனைவரும் பயணம் செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw3.html
யாழில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-வவுனியா ரயில் விபத்தில் இளைஞர் பலி
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 05:15.42 AM GMT ]
சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தார் என்று கூறப்பட்ட குடும்பஸ்தர் இன்று  சடலமாக மீட்க்கப்பட்டார்.
 சூராவத்தையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதான தர்மராசா சிவநாதன்  என்பவரே காணாமல்போன நிலையில் அயலில் உள்ள வெளிவளவில் இருந்து மீட்கப்பட்டார்.
குறித்த காணியில் சடலத்தை அவதானித்த அயலவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கும், கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தினர். இது சம்பந்தமாக மல்லாம் நீதிமன்றத்துக்கு பொலிஸார் கொடுத்த தகவலைத் தொடர்ந்து நீதவான் சடலத்தைப் பார்வையிட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
வவுனியா ரயில் விபத்தில் இளைஞர் பலி
வவுனியா, தோணிக்கல் பிரதேசத்தில் ரயில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியா தேக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான இளைஞரே சம்பவத்தில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறி்த்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw4.html

Geen opmerkingen:

Een reactie posten