தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

வடமாகாண சபைக்கு தெரியாமல் ஐந்து பிரதேச சபைகளுக்கு தேர்தல் சலுகைகள்

ஜனாதிபதி வருகையின் போது ஏற்பாடுகளை மேற்கொள்ள அரச அதிகாரிகளை பயன்படுத்தும் ஆளுநர்!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:05.48 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ். வருகையின் போது ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ள வடக்கில் ஆளுநரினால் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு தை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக எதிர்வரும் 2ம் திகதி ஜனாதிபதி வடக்கிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த ஜனாதிபதி வருகையின் போது ஒழுங்கமைப்புக்களை மேற்கொள்ள வடக்கில் ஆளுநரினால் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடக்கின் 5மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த எதிர்வரும் 2ம் திகதி வடக்கிற்கு வருகை தரவுள்ளார்.
குறித்த வருகைக்காக வடக்கில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் ஒழுங்கமைப்புக்கள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் குறித்த ஒழுக் கமைப்புக்களுக்காக ஆளுநரின் விசேட பணிப்பின் பெயரில், மாவட்டச் செயலக மற்றும் மாகாணசபைக்குட்பட்ட திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் பலர் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இதே ஆளுநர் வடமாகாணசபை தேர்தலிலும் வெளிப்படையாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பிரச்சார மேடைகளிலும் வெளிப்படையாகவே தோன்றி அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலிலும் அவர் தனது பங்கினை செலுத்தும் வகையில் அரசாங்க திணைக்கள ஊழியர்கள், திணைக்கள வாகனங்கள் பயன்படுத்த முழு அளவிலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இம்முறை படையினர் மற்றும் பொலிஸாரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் உச்சளவில் நடைபெறுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahwy.html
வடமாகாண சபைக்கு தெரியாமல் ஐந்து பிரதேச சபைகளுக்கு தேர்தல் சலுகைகள்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:35.54 PM GMT ]
வடமாகாண உள்ளூராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தப்படாமல் மாகாணத்தில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள 5 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள் மற்றும் பிற உதவிகளை மத்திய அரசாங்கம் தேர்தலை அடிப்படையாக கொண்டு வழங்கியிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 19ம், 20ம் திகதிகளில் மேற்படி  ஐந்து பிரதேச சபைகளின் தலைவர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரதேச சபைகளுக்கு கப் வாகனம், உழவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்கள் போன்றன மத்திய அரசினால் வழங்கப்படவுள்ளதாக, செய்திகள்
வெளியாகியிருக்கின்றன.
இந்நிலையில் குறித்த உதவிகள் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்டமையினால் தேர்தலை அடிப்படையாக கொண்ட உதவிகள் என
அறிய முடிகின்றது.
எனவே வடக்கில் அரசாங்க துறைகள் மற்றும் அரசாங்கத்தின் குறிப்பாக ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டில் உள்ள, சகல துறைகளிலும் தேர்தல் மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மாகாண உள்ளூராட்சி அமைச்சரும் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தமக்கு அந்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை எனவும், உள்ளூராட்சி சபைகளுக்கு சொந்தமானவையாக குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பின் அவை தொடர்பில்
எமக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தெரியப்படுத்தப்படவில்லை என முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahwz.html

Geen opmerkingen:

Een reactie posten