[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 03:40.00 PM GMT ]
குறித்த 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் கடந்த 17ம், 18ம், 19ம் திகதிகளில் மாகாணச பையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 5 அமைச்சுக்களுக்கான பாதீடுகள் மற்றும் அவ ற்றில் செய்யவுள்ள திட்டங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இவற்றில் குறிப்பாக வடமாகாண ஆளுநருக்கு 12கோடியே 47லட்சத்து 17ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவு 60லட்சம் ரூபா நிதி ஆளுநருக்கும் ஒதுக்கப்பட்டமை தொடர்பில் கடுமையான
எதிர்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் காண்பித்திருந்த நிலையில் இறுதியாக பிராமாண அடிப்படையிலான கொடுப்பனவை நிறுத்தவேண்டும். எனவும், ஆளுநருக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு தொடர்பிலும், ஆளுநர் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் அவரிடம் உள்ள ஆளணிகள் தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயத்தை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொள்வார். எனவும் முதலமைச்சரினால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டு குறித்த திருத்தங்களுடன் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவு திட்டம், ஆளுநரின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வரவுசெலவு திட்டத்திற்கான அங்கீகாரத்தினை வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி இன்றைய தினம் வழங்கியிருப்பதாக பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv5.html
குளத்திற்கு நடுவில் காணி வழங்கிய ஈ.பி.டி.பி மீது கிளி. 2ம் வாய்க்கால் மக்கள் குற்றச்சாட்டு!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 03:46.22 PM GMT ]
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கண்ணகை நகர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் மிக நீண்டகாலம் சுமார் 50 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
இந்நிலையில் ஈ.பி.டி. பியினர் குறித்த பகுதிக்குச் சென்று மாற்றிடங்களை தருவதாக கூறியதுடன், மக்கள் குடியிருக்கும் பகுதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்தால் வாழ முடியாது,
அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களையும் வழங்க முடியாது. என கூறி மாற்றிடங்களில் குடியேற்றுவதாக கூறி ஸ்கந்தபுரம்- 2ம் வாய்க்கால் பகுதியில் காணிகளை வழங்கி குடியேற்றியதுடன், அரசாங்க வீட்டுத்திட்டங்களும் மக்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆனால் கடந்த சில தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால், மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்றிடங்களுக்குள் வெள்ளநீர் பெருமளவில் புகுந்துவிட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளிலும், ஸ்கந்தபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையிலும் தங்கியிருக்கின்றனர்.
மேலும் வழங்கப்பட்ட மாற்றிடத்தில் பல குடும்பங்கள் வீடுகளுக்கான அடித்தளங்களையும், போட்டிருக்கின்றன.
இந்நிலையில் ஈ.பி.டி.பியின் பேச்சினை நம்பி குடியேறிய மக்கள் நடுத்தெருவுக்கு இப்போது வந்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahv6.html
Geen opmerkingen:
Een reactie posten