[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 05:46.17 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு வட்டரக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுபல சேனாவிற்கு எதிராக அமைப்பு ஒன்றை உருவாக்கி கருத்துக்களை வெளியிட்டவரே இந்த வட்டரக்க விஜித தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
மழை வெள்ளம் காரணமாக பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் நாளை தேர்தல் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றியும் நாளை அறிவிக்கப்படும் என வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahw1.html
மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அவரின் பதவியை ரத்து செய்ய இடமுண்டு: சரத் என் சில்வா
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 05:48.23 PM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இந்தக்கருத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரிபால சிறிசேனவும் செய்து கொண்டதாக கூறி திஸ்ஸ அத்தநாயக்க, வெளியிட்ட இரகசிய ஆவணமானது போலி என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது, இலங்கையின் 452 ஆவது குற்றவியல் சட்டத்தின் கீழ் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரம் குற்றமாகும்.
இந்தக்குற்றச்சாட்டின் கீழ் குற்றம் மேற்கொள்ளப்பட்டு 20 வருடங்கள் வரை குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று சரத் என் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, செய்தித் தாள்களை போலியாக வெளியிடல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 83வது குற்றவியல் சட்டத்தின்படி குற்றமாகும்.
இந்தக்குற்றச்சாட்டுக்கள் மூலம், மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், அவரை உயர்நீதிமன்றத்தின் ஊடாக அந்த பதவியை ரத்து செய்ய முடியும் என்றும் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahw2.html
Geen opmerkingen:
Een reactie posten