[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 11:12.33 AM GMT ]
வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி தம்மிக்க கனேபொல முன்னிலையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சத்துரங்கனி மானவடு இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை இம்மாதம் 8ம் திகதி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko1.html
எம்மின விடுதலையின் அழிவுகளுக்கு எம்மவர்களே துணைபோயினர்: பா.உ. சிறீதரன்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 11:32.51 AM GMT ]
சாவகச்சேரி பிரதேச சபையினரால் தேசிய வாசிப்பு மாதம் 2014இன் நிறைவு நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வானது, கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலய பொது மண்டபத்தில் நேற்று முன்தினம் பி.ப 2.00 மணியளவில் சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் சிற்றம்பலம் துரைராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்,கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,
உலகமே வியந்து நின்ற எமது வீர சுதந்திர போராட்டக்களமானது எம்மினத்தவர்களென்று சொல்ல தகுதியற்ற சிலரது காட்டிக்கொடுப்புக்களாலும் துரோகத்தனங்களாலும் இன்று மௌனிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கு காரணகர்த்தாக்கள் வரிசையில் முதன்மை இடத்தை வகிப்பவர்களின் வரிசையில் யாழ்ப்பாண அமைச்சர் சகிதம் அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர் சார்ந்த மாகாண சபை உறுப்பினர்களேயாவர்.
அரசியல் ஆதாயத்துக்காக ஒரு விடுதலை வேண்டி தர்மத்தின் வழி நின்று போராடிய எம்மவர்களது போராட்டத்தை தமது காட்டிக்கொடுப்புக்கள் மூலமாகவும் மிகப்பெரியதொரு துரோகத்தை செய்து இரத்தம் தோய்ந்த ஒரு வரலாற்று தவறை புரிந்து அரசியல் ஆசனத்தை இன்று அவர்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான பதிலை அவர்கள் வழங்கவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. எமது விடுதலையில் புனிதம் தோய்ந்த இம்மாதத்தில் இணைந்திருக்கிறோம்.
வாசிப்பு என்பது ஒரு மனிதனின் எண்ணக்கிடக்கைகளில் எழுச்சியை ஏற்படுத்துகிறது.
வாசிப்பின் வாயிலாக நல்ல விடயங்களையும் நல்ல சிந்தனைகளையும் மனதிலே புதைத்து வீரியம் மிக்க கல்வி சார் உலகை நோக்கி பயணிக்க பாடுபடுவோம் எனவும் தனதுரையில் குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko2.html
Geen opmerkingen:
Een reactie posten