[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 05:24.41 AM GMT ]
கடந்த சில நாட்களாக கட்சித்தாவலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கு ஒன்றை சொல்ல விரும்புகின்றேன் வருகின்ற 5 ம் திகதி தேர்தல் பிரசார இறுதி நாளில் அரசாங்கத்துக்கு எலி பூனை கரப்பதான் மட்டுமே அரசுடன் இருக்கும்.
நான் வெளியேறும் மூன் அனைத்துக்கும் வேலை பார்த்து விட்டுத்தான் வெளியே வந்தேன் . என்பதை சொல்ல விரும்புகின்றேன்
இன்றைய நாளில் இருந்து உங்களது புத்தகத்தில் எழுதி வையுங்கள் நான் சொன்னது நடக்குதா இல்லையா என்பதை என சவால் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaiw5.html
மாத்தளை மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதி எதிரணியின் பக்கம்?
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 06:31.37 AM GMT ]
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துப்படுத்தும் முக்கிய நபர் இவ்வாறு கட்சி தாவ தயாராகி வருகிறார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் ஆளும் கட்சியின் பக்கம் தாவ தயாராகி வருகின்றனர்.
மாத்தளை மாவட்டத்தில் அடுத்த சில தினங்களில் பெரும் அரசியல் மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாக ஆளும் மற்றும் எதிரணி வட்டாரங்கள் கூறின.
இந்த தகவல் குறித்து அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கொழும்பு ஊடகம் ஒன்று வினவிய போது, அனைவருக்கும் சுபிட்சமான எதிர்காலம், மைத்திரி ஆட்சி என அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaixy.html
இளம் பிக்குவை துஸ்பிரயோகம் செய்த விஹாராதிபதிக்கு 30 வருட கடூழிய சிறை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 06:35.52 AM GMT ]
மொனராகலைப் பிரதேச விகாரை ஒன்றின் விஹாராதிபதி, இளம் பிக்குவை பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் மே மாதம் 13 ஆம் திகதி வரையான ஒரு மாத காலமாக மேற்படி பிக்கு சிறுவனை மொனராகலை விஹாரையொன்றைச் சேர்ந்த விஹாராதிபதி பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார்.
மேற்படி குற்றச்செயல் தொடர்பில் கைது செய்யப்பட்ட விஹாராதிபதி பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் மீண்டும் விசாரணைகளின் போது அவர் நீதிமன்றம் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஹாராதிபதி, பிக்கு சிறுவன் தொடர்பான வைத்திய அறிக்கையின் பிரகாரம் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு மொனராகலை நீதிவான் நீதிமன்றம் 30 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதுடன், 75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம் மேலும் 75 ஆயிரம் ரூபாவை பாதிக்கப்பட்ட இளம் பிக்குவுக்கு இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaixz.html
Geen opmerkingen:
Een reactie posten