மகிந்த ராஜபக்ஷ எவருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறார், நானும் அண்ணன் சமலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு சென்று அனைத்தையும் தெளிவுபடுத்தினோம், அவ்வேளை அவர் அதற்கு இணங்கினார், ஆனால் பின்னர் வேறு மாதிரி செயற்படுகின்றார். இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் கோத்தபாய. பசிலும், நாமலும் அனைத்தையும் குழப்பகரமானதாக மாற்றியுள்ளனர். ஜனாதிபதியின் பிரச்சார பொறுப்பு அவரது புதல்வர்களான யோசித மற்றும், ரோகிதவுடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பணிகளில் ஓருங்கினைப்பு இல்லை.
நான் மைத்திரியின் நண்பன் என்பதால் அவர்கள் என்னையும் சந்தேகப்படுகின்றனர். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு செல்லும் வரை காத்திருந்திருந்து விட்டு நான் மைத்திரியுடன் இணைந்து புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைதொகுதியை திறந்துவைத்ததாக அமைச்சர்கள் எனக்கு எதிராக ஜனாதிபதியிடம் கதைவிடுகின்றனர். (அதாவது மைத்திரி பிரிய முன்னர் நடந்த நிகழ்வு). மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்,அவரை குற்றம்சொல்வதில் அர்த்தமில்லை, இந்த தவறை திருத்தாவிட்டால் எங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் எனவும் கோத்தா தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் கவின் அவரை சமாதானப்படுத்த முயன்றதாகவும், சிலநிமிடங்கள் அமைதியாக இருந்த பின்னர் கோத்தபாய அங்கிருந்து வெளியேறியதாகவும் தெரியவருகின்றது. இது பாரிய மாற்றமொன்றின் ஆரம்பமாக இருக்கலாம் என அரசியல்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஒட்டுமொத்ததில் பார்த்தால், கோட்டபாய ராஜபக்ஷவே கட்சி தாவுவார் போல இருக்கே ? என்ன தான் நடக்கிறது என்று தெரியவில்லை. கொழும்பில் நடக்கும் இதுபோன்ற தடாலடியான பல சம்பவங்கள் எமக்கு கிடைக்க இருக்கிறது. எனவே அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1579.html
Geen opmerkingen:
Een reactie posten