தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 december 2014

ISIS போட்ட கணக்கு சரி என்றால் இன் நேரம் அமெரிக்க போர் கப்பலும் இந்திய போர் கப்பலும் அடிவாங்கி இருக்கும் !

கடந்த மாதம் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டது. அது ஒன்றும் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்த தாக்குதலின் பின்னணி பற்றி கூறப்படும் ஒரு விளக்கம், ராணுவ வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அந்தப் பின்னணியை நம்புவதா, இல்லையா என்பதும் பலருக்கு சந்தேகமாக உள்ளது.
அப்படியான அந்த பின்னணி என்ன?
முறியடிக்கப்பட்ட அந்த தாக்குதல் உண்மையில் கராச்சி துறைமுகத்துக்கு சேதத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் நடத்தப்பட்டது அல்ல, துறைமுகத்தில் இருந்த பாக். கடற்படையின் இரு போர்க் கப்பல்களை கடத்துவதுதான் திட்டமாம். இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள AQIS எனப்படும் அல்-காய்தா இந்திய துணைக்கண்டப் பிரிவு (AQIS – Al Qaeda in the Indian Subcontinent) ஒரு அறிக்கையை சில மீடியாக்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், “கராச்சி டொக் யார்டில் இருந்து பாகிஸ்தான் கடற்படையின் இரு போர்க்கப்பல்களை கடத்திச் செல்வதுதான் திட்டம்.கடத்திச் சென்று ஒரு அமெரிக்க கடற்படை கப்பலையும், ஒரு இந்தியக் கடற்படை கப்பலையும் கடலில் வைத்து தாக்கி அழிப்பதுதான் நோக்கம். இந்த திட்டம், இரு குழுக்களால் செய்யப்படுவதாக இருந்தது.
முதலாவது குழுவினர் பாகிஸ்தானின் ஃபிரிகேட் ரக கப்பலான பி.என்.எஸ். ஜூல்ஃபிகாரை கைப்பற்றி கடத்திச் சென்றிருக்க வேண்டும். இந்தக் கப்பலை கடலில் செலுத்திச் சென்று, அமெரிக்க கடற்படையின் ஆயில் டேங்கர் யு.எஸ்.என்.எஸ். சப்ளை கப்பலை தாக்கி மூழ்கடித்திருக்க வேண்டும். (மேலேயுள்ள போட்டோவில், நடுக்கடலில் மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் யு.எஸ்.என்.எஸ். சப்ளை டேங்கர் கப்பல்) திட்டப்படி இரண்டாவது குழு இருந்து பாக். கடற்படையின் பி.என்.எஸ். அஸ்லாட் கப்பலை கடத்திச் சென்றிருக்க வேண்டும். (சம்பவம் நடந்தபோது இந்தக் கப்பல் காராச்சி டொக் யார்டில் இல்லை. ஆனால், அதற்கு அருகில் – கராச்சி துறைமுக ஏரியாவில் – நங்கூரமிடப்பட்டு நின்றிருந்தது)
இந்தக் கப்பலை இந்தியக் கடலில் செலுத்திச் சென்று, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மூலம் இந்தியக் கடற்படையின் கப்பல் ஒன்றை தாக்கி அழித்திருக்க வேண்டும். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டம் நிறைவேறவில்லை. தாக்குதலுக்கு சென்ற அனைவரும் வீர மரணத்தை தழுவிக் கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-காய்தா இந்திய துணைக்கண்டப் பிரிவின் இந்த அறிக்கை, அவர்களிடம் அப்படியொரு திட்டம் இருந்தது என்பதையே காட்டுகிறது. ஆனால், திட்டம்  நிறைவேற்றப்படுவது, அவ்வளவு சுலபமானதல்ல – பாகிஸ்தான் கடற்படைக்கு உள்ளே இவர்களுக்கு உதவி இல்லாவிட்டால். இதில் மற்றொரு முக்கிய விஷயம், இந்தத் தாக்குதலுக்கு சென்று உயிரிழந்தவர்களில் ஒருவர், பாகிஸ்தான் கடற்படையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட நபர். பெயர், ஓவாயிஸ் ஜக்காரி.
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் பாக். கடற்படையில் இரண்டாம் லெப்டினென்ட்டாக இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், அல்-காய்தாவில் இணைந்திருந்தார் இவர். கராச்சி துறைமுகத்தில் கப்பலை கடத்தும் முயற்சி தோல்வியடைந்தபோது, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர். அல்-காய்தா சார்பில் இந்த தாக்குதலுக்கு சென்ற மற்றொருவரும், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் இரண்டாம் லெப்டினென்ட்தான். அவரது பெயர், ஜீஷான் ரபீக். கராச்சி துறைமுக மோதலில் இவரும் உயிரிழந்தார். அல்-காய்தா இயக்கம் தற்போது அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்புபோல டாப் நிலையில் இல்லை. அல்-காய்தாவில் இருந்து பிரிந்து சென்ற ISIS இயக்கமே அமெரிக்காவால் தமது பிரதான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இழந்த பெயரை மீண்டும் பெறுவதற்காக அல்-காய்தா இந்த தாக்குதலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம். இவர்கள் கடத்த முயன்ற ஃபிரிகேட் ரக கப்பலில், அட்வான்ஸ் வெப்பன் சிஸ்டம் உள்ளது. அத்துடன் நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்ஃபிடோக்கள், 4 கைடட் ஏவுகணைகள் ஆகியவையும் உள்ளன. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அவை. 120 கி.மீ. தொலைவில் உள்ள கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடியவை.
http://www.athirvu.com/newsdetail/1582.html

Geen opmerkingen:

Een reactie posten