தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்



ஜனாதிபதி தேர்தல்! மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:57.47 AM GMT ]
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணம், இன்று திங்கட்கிழமை (01) தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டது. 
இந்த கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் அங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா,
கடந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிகப்படியான வாக்குகளால் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான சகல தேர்தல் வியூகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,
கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இதுவரையில் 14 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும் சில தினங்களில் மேலும் சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான பசில் ராஜபக்ச சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZkoy.html
வெள்ளை ஆடையுடன் உடமைகள் இல்லாமல் வரவேண்டும்: பல்கலைக்கழக மாணவர்களுக்கு வலியுறுத்தல்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 11:05.21 AM GMT ]
2012/13 கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை கொழும்பு நாரஹேன்பிட்டியில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் 13 ஆயிரம் மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கவுள்ளார். இந்த நிலையில் புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்தக் கடிதத்தில், மாணவர்கள் வெள்ளை வேட்டி, சேட் அணிய வேண்டும், மாணவிகள் வெள்ளைச் சேலை அணிய வேண்டும் என்றும், நிகழ்விடத்துக்குள் நுழையும் போது உடமைகள் எவற்றையும் தங்களுடன் எடுத்த வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வேறு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszCTVKZko0.html

Geen opmerkingen:

Een reactie posten