தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

வடக்கு மக்களின் ஆதரவு மகிந்தவுக்கே! அடித்துச் சொல்கிறார் அமைச்சர் பீரிஸ்

கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில் மகிந்தவிற்கான பிரசாரம் பிள்ளையானால் முன்னெடுப்பு!
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 12:11.50 AM GMT ]
நாளை மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் த.ம.வி.பு. கட்சியின் தலைவர் பிள்ளையான் தலைமையில் கல்வி அபிவிருத்தி என்ற போர்வையில மகிந்தவிற்கான தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் தற்போதைய மட். மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
மகிந்த இம்முறை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது என தவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எப்படியாவது மகிந்தவை அரியாசனம் ஏற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்து செயற்படுகின்றார்.  அதனொரு அங்கமே நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு ஹோட்டலில் நடைபெறவிருக்கும் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்திற்கு மட்டக்களப்பில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், கல்வி உயர் அதிகாரிகள் இணைந்து கல்வியை அபிவிருத்தி செய்வது என்ற தொனியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கின்றார்.
உண்மையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டதன் பின்னர் எந்தக் கட்சிகளாக இருந்தாலும் சரி இவ்வாறான கூட்டங்களை கூட்ட முடியாது என்பதனை அறிந்து கொண்டும் அவர்களையும் ஏமாற்றி தனது தேர்தல் பிரசாரத்தினை முடுக்கிவிடும் பொருட்டு இவ்வாறான வேலைகளில் இறங்கியிருக்கின்றார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு அதனையும் மீறி அந்த கூட்டத்தற்கு கலந்து கொள்வோர் எக்காரணம் கொண்டும் எந்தவிதமான தேர்தல் கடமைகளிலும் கலந்து கொள்ள முடியாது எனவும் தேர்தல் ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சட்டத்தினையும் மீறி கலந்து கொள்வோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் எனவும், கூட்டத்திற்கு கலந்து கொள்பவர்களை எக்காரணம் கொண்டும் எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதனை நிறுத்த வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahw4.html
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கே ஆதரவு!- பசில் நம்பிக்கை
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 02:11.40 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்கும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பின் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றின்போது அமைச்சர் இந்த நம்பிக்கையை வெளியிட்டு;ள்ளார்
அதிகமான முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்ற வகையி;ல். காங்கிரஸின் முடிவு ஜனாதிபதிக்கு சாதகமாகவே இருக்கும் என்று அமைச்சர் எதிர்வுகூறியுள்ளார்.
ஏனைய கட்சிகள் பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை வெளியி;;ட்டுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம்ää தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமது நிலைப்பாடுகளை வெளியிடாமல் இருந்துவருகின்றன.
இதேவேளை ஜனாதிபதி;க்கு மிகவும் நம்பிக்கையானவராக திகழ்;ந்த முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்ää பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்தமையானதுää அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahw6.html
வடக்கு மக்களின் ஆதரவு மகிந்தவுக்கே! அடித்துச் சொல்கிறார் அமைச்சர் பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 12:27.28 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவின் வரவு செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் இன்னுமொரு தடவை அவரில் நம்பிக்கை கொள்வது என எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், வெறுமனே வெற்று வார்த்தை ஜாலங்களில் சொல்லிவிட்டு போவதை வைத்தன்றி உண்மையில் நிஜத்திலே என்னென்ன விடயங்களை ஒருவர் செய்துள்ளார் என்பதை வைத்தே ஒருவரது நம்பகத் தன்மையை அளவிடமுடியும்.
அந்தவகையில் ஜனாதிபதி வடக்கு மக்களுக்காக நிறையவே செயலில் செய்து காண்பித்துள்ளார். அதனை உணர்ந்து மக்கள் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு கணிசமான அளவு முன்னெப்போதுமில்லாத வகையில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
ஜனாதிபதி மஹிந்த நினைத்திருந்தால் பெரும் வளங்களை வடக்கிற்கென ஒதுக்காது நாட்டின் வேறு பகுதிக்கு ஒதுக்கியிருக்க முடியும். ஆனால், தனக்கு கடந்த காலங்களில் மக்கள் பெருமளவு வாக்களிக்கவில்லை என்பதை அறிந்தும் கூட மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இவற்றைப் பார்க்கும் மக்கள் இம்முறை அவருக்கு நிச்சயம் வாக்களிப்பர் என்றார். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியானது முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், ஒன்றுக்கொன்று விரோதமான கொள்கைகளையுடைய கட்சிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிபாலவால் முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.
அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பானது. அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கதவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக இன்னும் திறந்தே உள்ளது. பேச்சு மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும்.
குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தமிழ் மக்களுக்கு எதிரானவர் அல்லர். அப்படி அவர் எதிரானவராக இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கென வளங்களை ஒதுக்கியிருக்கமாட்டார் அல்லவா? மாற்றம் வேண்டும் என்பதற்காக வெறுமனே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது.
ஒரு விடயத்தை நன்கு அறிந்து, ஆராய்ந்த பின்னர்தான் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
எனவே, வடக்கு மாகாணசபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் அவற்றை நிறைவேற்ற முடியும் என்று அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahw5.html

Geen opmerkingen:

Een reactie posten