[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 12:59.00 AM GMT ]
சில உள்நாட்டு வெளிநாட்டு இணையத்தளங்களை நடாத்துவோர் பிரபல்யமானவர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வருகின்றனர்.
நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய தகவல்களை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி இவ்வாறு பணம் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைககளை மக்கள் நம்ப மாட்டார்கள்.
இதனால் குறித்த இணையத்தளங்களை அரசாங்கம் முன்வந்து தடை செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
மக்களே அவ்வாறு சேறு பூசும் இணையத்தளங்களை புறக்கணித்து விடுவார்கள்.
சேறு பூசும் இணையத்தளங்கள் தொடர்பில் பதற்றமடைய வேண்டியதில்லை என ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnry.html
பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:04.04 AM GMT ]
அளுத்கம, பேருவளை ஆகிய பிரதேசங்களில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டதனைப் போன்ற வன்முறைகளை கத்தோலிக்க மற்றும் பௌத்தர்களுக்கு இடையில் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
திட்டமிட்ட ஓர் கும்பலொன்று சில பௌத்த பிக்குகளைப் பயன்படுத்தி இவ்வாறு மத குரோதத்தை தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக இந்த பாரிய எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இன முரண்பாடுகளைத் தூண்டி அதனை இன வன்முறையாக வெடிக்கச் செய்வதில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு உண்டு.
கத்தோலிக்க மக்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட பௌத்த பிக்குகளுக்கு மட்டும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இரகசியமான முறையில் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் முயற்சிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அளுத்கம சம்பவம் போன்று கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் இடங்களில் கலகங்கள் ஏற்படுவதனை தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnrz.html
Geen opmerkingen:
Een reactie posten