மட்டக்களப்பில் சூனியம் செய்யவதற்காக மனித மண்டையோடு !
[ Aug 05, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3135 ]
மட்டக்களப்பு வந்தாறுமூலை களுவன்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மனித மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலித்தீன் பையில் கட்டப்பட்ட நிலையில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் வளாகத்தில் இனம்தெரியாத பொதி ஒன்று கிடப்பதை கண்ட வீட்டின் பெண் ஒருவர் அதனை எடுத்து குப்பையில் போட்டு எரிக்க முற்பட்ட போது அதிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து அயல் வீட்டுக்காரர்களை அழைத்து வந்து பார்த்தால் அதில் மனித மண்டையோடு காணப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய மண்டையோட்டினை எடுத்து அடக்கம் செய்துள்ளார்கள். குறித்த மண்டையோடு மந்திரவாதிளால் சூனியம் செய்வதற்காக சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவில் கொலைசெய்யப்பட்டவரின் உடல் 7 மாதங்களின் பின்னர் கிளிநொச்சிக்கு !
[ Aug 05, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3020 ]
இவரது உடலை பெற்றுக்கொள்வதற்கு உறவினர்கள் எவ்வளவோ முயற்சிசெய்தும் பலனளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடாக அவுஸ்திரேலிய வாழ் தமிழ் உறவுகள்- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அவுஸ்திரேலிய கிளை மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் நேற்று கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/677.htmlதொலைபேசிக் காதல் முறிவு - காதலியைப் பார்காமலே தற்கொலை செய்த முட்டாள் !
[ Aug 05, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5640 ]
யாழ்ப்பாணத்தில் எவ்வாறான முட்டாள்தனம் மிக்கவா்கள் உள்ளார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் உதாரணமாகும்.
தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி மரணமானர்.இவ்வாறு மரணமானவர் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இதற்கு முன்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோதும் உறவினர்கள் அவரைக் காப்பாற்றியதுடன் அவருக்கு அறிவுரைகளும் கூறியுள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த இளைஞர் அளவுக்கு அதிகமான மருந்து வில்லைகளை உட்கொண்டுள்ளார். அவரது நடவடிக்கையில் மாற்றத்தை அவதானித்த உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை சேர்ப்பித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த இளைஞர் நேற்றுக் காலை வைத்தியசாலையிலேயே உயிரிழந்தார் எனக் கூறப்படுகின்றது.
http://www.athirvu.com/newsdetail/679.html
Geen opmerkingen:
Een reactie posten