நேற்றைய தினம்(04) கொழும்பு மருதானையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றினுள் திடீரென நுளைந்த புத்த பிக்கு ஒருவரும் மேலும் சில சிங்கள நபர்களும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ராஜதந்திரிகளை பகிரங்கமாகவே மிரட்டியுள்ளார்கள். 2009ம் ஆண்டு நடைபெற்ற போரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரை அழைத்து, மருதானையில் உள்ள தேவாலயம் ஒன்றில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது அரச சார்பற்ற அமைப்பு ஒன்று. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திரிகளும் கலந்துகொண்டார்கள். இக்கூட்டம் அரம்பமாகிய சிறுது வேளையில் அங்கே திரண்ட சில ஆர்பாட்டக்காரர்கள், திடீரென உள்ளே நுளைந்து கூட்டத்தை நடத்த கூடாது என மிரட்டியுள்ளார்கள்.
இதில் புத்த பிக்கு ஒருவரும் சேர்ந்து இக் கூட்டம் சட்டத்திற்கு புறம்பான முறையில் நடப்பதாகவும் நீங்கள் அனைவரும் கைதுசெய்யப்பட உள்ளீர்கள் என்றும் கூறி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ராஜதந்திரிகளை மிரட்டியுள்ளார். இதேவேளை இந்த புத்த பிக்குவுடன் சென்ற நபர்கள், தம்மிடம் இருந்த கமராக்கள் மூலமாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை போட்டோ எடுத்து மிரட்டியுள்ளார். இதனால் காணமல் போனவர்களின் உறவினர்கள் மேலும் பீதியடைந்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் மிரட்டிக்கொண்டு இருக்கும்போது, அங்கே வந்த பொலிசார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேண்டும் என்றே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இலங்கையில் இயங்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை தாம் உண்ணிப்பாக அவதானித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அவர்கள் இதுபோன்ற கூட்டங்களை நடத்தாது இருக்க இலங்கை அரசு, தனது அடியாட்களை இவ்வாறு ஏவி விடுகிறது. இவர்கள் ஆர்பாட்டம் செய்வது போல அங்கே புகுந்து மக்களை மிரட்டி வருகிறார்கள். ஐக்கிய நாடுகள் தற்போது இலங்கை மீது விசாரணை நடத்த, ஒரு குழுவை நியமித்துள்ள விடையம் யாவரும் அறிந்ததே. இலங்கை அக் குழுவிற்கு தடை விதித்துள்ளது. எனினும் இலங்கையில் இருந்து செயல்படும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் நிச்சயம் இக் குழுவிற்கு உதவிகளைச் செய்யும் என கோட்டபாய ஒரு கணக்கு போட்டு வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் இது போன்ற தொண்டு நிறுவனங்களை அடக்கி ஒடுக்க அவர் திரைமறைவில் திட்டம் தீட்டி வருகிறார். இச் செயலை அமெரிக்கா கண்டித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten