[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 08:58.13 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு சேறு பூசும் வகையில் புத்தகம் அச்சிடப்பட்ட அச்சகம் ஒன்று நேற்றிரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சஜித்துக்கு எதிராக போலி புத்தகங்களை அச்சிட்ட அச்சகம் ஒன்று பன்னிப்பிட்டிய பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒரு தொகை புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
“சஜித்தின் பலத்தின் கனவை குழப்ப சிறிகொத்தாவை ஆக்கிரமித்த நவீன்” எனும் தலைப்பில் இந்த புத்தகம் சிறிகொத்தாவில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அச்சகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த புத்தகம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அச்சிடுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht5.html
மைத்திரி, ஜனாதிபதிக்கு எதிராக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே சதித் திட்டம் தீட்டினார்!
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 08:59.18 AM GMT ]
மைத்திரிபாலவின் நடவடிக்கைகள் குறித்து தமக்கு எப்போதுமே சந்தேகம் நிலவியதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
2005 மற்றும் 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் காணப்பட்ட வலுவான தன்மைகூட தற்போதைய எதிர்க்கட்சிக்கு கிடையாது எனவும், மைத்திரிபாலவிற்கான ஆதரவு வலுவானதாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சிக்கே ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht6.html
Geen opmerkingen:
Een reactie posten