தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 14 பேர் மாத்தறையில் கைது

சிறுபான்மை இனங்களுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஜனாதிபதி நாட்டுக்கு தேவை: மன்னார் ஆயர்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:56.26 AM GMT ]
நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய ஜனாதிபதி நாட்டுக்குத் தேவையெனவும், போர் முடிவுற்றும் மக்களுக்கு சுதந்திரம், சமாதானம் கிடைக்கவில்லையெனவும் மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை நத்தார் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் தின நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் 'இயேசுவே ஆண்டவர்' மண்டபத்தில் இன்று அதிகாலை, மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலா நிதி இராயேப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.
நள்ளிரவுத் திருப்பலியயை தொடர்ந்து ஆயர் கருத்துக்கூறுகையில்,
அன்பும், அமைதியும் இலங்கைக்கு மட்டுமல்ல உலகுக்கும் தேவைப்படுகின்றது என்பதை இன்றைய கிறிஸ்து பிறப்பு எமக்கு தெரிவிக்கின்றது. இலங்கையில் போர் முடிவுற்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் நாட்டுக்கும் எமது மக்களுக்கும் இன்னும் சுதந்திரம், சமாதானம் கிடைத்ததாக இல்லை.
யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியை சந்தித்து கலந்துரையாடிய போது, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 5,000 வீடுகளே தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பது தொடர்பிலும், வடபகுதிகளில் வியாபித்திருக்கும் இராணுவப் பிரசன்னம் காரணமாக மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் இல்லாத நிலை குறித்தும் விவாதித்திருந்தோம்.
இவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தலை நாம் சந்தித்திருக்கின்றோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதொரு தலைமைத்துவம் இன்று தேவைப்படுகின்றது.
இதற்காக நாம் இறைவனிடம் மன்றாட வேண்டும். நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை சேர்த்து அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய தலைவர்கள் இன்று எமக்குத் தேவைப்படுகின்றது என அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht1.html
25 மாவட்டங்களில் 22ல் வெற்றி நிச்சயம்!- பொது வேட்பாளர் மைத்திரி
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 08:48.16 AM GMT ]
25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களின் வெற்றி உறுதி என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களுக்கு தற்போது கிடைத்துள்ள உண்டையான தகவல்களின் படி, 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பொது வேட்பாளரின் அன்னப்பறவை சின்னம் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீகோத்த கட்சி தலைமையகத்திற்கு முன்னாள் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்சவின் குண்டர்கள் வந்து தாக்குதல் மேற்கொண்டனர். அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் வசந்த பண்டார ஆகியோரே அவர்களை அனுப்பியுள்ளனர் எனவும் சாட்சியுடன் நிரூபணமாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht3.html
சீத்தாவக்கை பிரதேச சபையின் அதிகாரத்தை இழந்தது அரசு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 08:51.35 AM GMT ]
சீத்தாவக்கை பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களில் ஐவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்ததையடுத்து அந்த பிரதேச சபையின் பெரும்பான்மையை அரசு இழந்துள்ளது.
ஐந்து உறுப்பினர்கள் எதிரணிக்கு மாறியதையடுத்து அந்த பிரதேச சபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது.
இதன்பிரகாரம் அந்த பிரதேச சபையில் எதிரணிக்கே பெரும்பான்மை இருக்கிறது. 
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht4.html

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 14 பேர் மாத்தறையில் கைது
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 08:01.09 AM GMT ]
மாத்தறை, திக்வெல்லயிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட நீர்கொழும்பு, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 14 பேரை மாத்தறைப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வான் ஒன்றில் இவர்கள் திக்வெல்லைப் பிரதேசத்துக்கு வந்துள்ளதாகவும், வான் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKaht2.html

Geen opmerkingen:

Een reactie posten