குறித்த தபால்மூல வாக்களிப்பிற்காக யாழ்.மாவட்டத்தில் 171வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 14 ஆயிரத்து 328 வாக்காளர்கள் வாக்களிப்பு செய்யவுள்ளனர். இதேபோன்று கிளிநொச்சி 92 வாக்களிப்பு நிலையங்கள் 18ஆயிரத்து 396வாக்காளர்கள், முல்லைத்தீவு 290வாக்களிப்பு நிலையங்கள், 2553 வாக்காளர்கள், மன்னார் 46வக்களிப்பு நிலையங்கள், 2546 வாக்காளர்கள், வவுனியா 272 வாக்களிப்பு நிலையங்கள் 3265 வாக்காளர்கள் வாக்களிப்பினை செய்யவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் தங்கள் வாக்குகளை செலுத்த முடியாதவர்கள் நிரப்பப்படாத வாக்குச் சீட்டுக்களை,தேர்தல் திணைக்களத்தில் ஒப்படைத்தால் எதிர்வரும் 30ம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்தில் வாக்களிப்பினை செய்யலாம் எனவும் எதிர்வரும் 26ம் திகதி பொலிஸார் மற்றும் மாவட்டச் செயலக ஊழியர்களுக்கான வாக்களிப்பும் நடைபெறவுள்ளது.
மேலும் மேற்படி தபால்மூல வாக்களிப்பினை 245கண்காணிப்பாளர்கள் காண்காணித்து வருகின்றனர்.
இவர்களில் 60 பேர் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என தேர்தல்கள் திணைக்களம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை தொடர்ச்சியாக 30ம் திகதிவரையில் குறித்த தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCRXKaiu7.html
Geen opmerkingen:
Een reactie posten