நுவரெலியா பிரதேச சபையில் 2011 ஆண்டு தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற உறுப்பினர்களில் மூவர், கட்சி தாவியமையால் அவர்கள் தங்களுடைய உறுப்புரிமையை இழந்தனர். அதற்கு பதிலாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வெற்றிடங்களுக்கு மலையக மக்கள் முன்னணியின் பட்டியலில் போட்டியிட்டு 13ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட வேலு மயில்வாகனம் (விருப்பு வாக்குகள் 1,601) 14ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட அருணாசலம் நல்லமுத்து (1,583 விருப்பு வாக்குகள்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் இவ்விருவரும் ஹட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் இன்று சத்தியபிரமானம் செய்து கொண்டுள்ளனர்.
இன்னும் ஒரு உறுப்பினரை மிக விரைவில் நியமிக்கவுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உறுப்புரிமை இழந்த மூன்று உறுப்பினர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRXKait4.html
Geen opmerkingen:
Een reactie posten