தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

இந்திய மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்!!

குற்றம் சுமத்துவோர் ஆதாரங்களுடன் வரவேண்டும்! காணி அமைச்சருக்கு டளஸ் எச்சரிக்கை
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:03.08 PM GMT ]
அரசாங்கம் மீது குற்றம் சுமத்துவோர் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களுடன் வரவேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அண்மையில் கட்சியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் கண்ணீர் விட்டழுதார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போதைவஸ்துக்காரர்களும் கொள்ளையர்களுக்கும் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் கட்சி உரியவர்களை தண்டிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkx7.html
மஹிந்த இருக்கும் வரை கட்சியில் உள்ளோர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கனவை காணமுடியாது: ஐ.தே.க
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:07.31 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ முடியும் என்று கட்சியினால் போதிக்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை எந்த உறுப்பினரும் இதனை எதிர்ப்பார்க்கமுடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் இந்தக்கருத்தை இன்று வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள பல உறுப்பினர்கள் தாம் ஒருநாள் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
எனினும் அது வரையறுக்கப்பட்ட கனவாகவே இருக்கும் என்று காசிம் மாவனல்லையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஆளும் கட்சியில் இருந்து மேலும் பலர், கட்சிமாறுவதை தடுக்கமுடியாதிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjoy.html
இந்திய மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:39.10 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சாகும் வரையிலான உணவு உண்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பகுதியில் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட 38 தமிழக மீனவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த போராட்டம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்திய வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjoz.html

Geen opmerkingen:

Een reactie posten