தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் அடுத்த வாரம் சம்ர்ப்பிப்பு!



மஹிந்தவுக்கு கட் அவுட் வைப்பதை எதிர்த்தவரின் வீட்டில் தாக்குதல்! இருவர் காயம்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:45.17 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார கட் அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு தாக்குதலுக்குள்ளானது.
திவுலப்பிட்டிய, குடகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த துசித்த வீரசிங்க என்பவரின் வீட்டின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 29 ம் திகதி தனது விட்டின் முன் பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார உருவப் படமொன்றை வைக்க முயன்ற நபர்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாக துசித வீரசிங்க தெரிவித்தார்.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் தனது வீட்டுக்கு வந்த திவுலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் இந்திக்க அனுருத்த உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த 15 ஆதரவாளர்கள் தன்னை மிரட்டியதாக துசித்த வீரசிங்க தெரிவித்தார்.
இது தங்களது அரசாங்கம் என்றும், தாங்கள் விரும்பும் இடங்களில் ஜனாதிபதியின் கட் அவுட்களை வைக்க முடியுமென்றும் திவுல்பிட்டிய பிரதேச சபயின் தலைவர் தன்னிடம் மிரட்டியதாக துசித்த வீரசிங்க கூறினார்.
இதற்கு யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாதேன்று மேலும் எச்சரித்த அவரும் அவருடன் வந்தவர்களும், வீட்டில் இருந்து வெளியே வந்த தனது இரு சகோதரர்களை தாக்கியதாகவும் கூறினார் துசித்த வீரசிங்க.
இது சம்பந்தமாக பொலிசாருக்கு புகார்களை சமர்ப்பித்துள்ள போதிலும் சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தாக்கப்பட்ட நபர்கள் திவுலப்பிட்டிய அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு பாதுகாப்பு கருதி தம்பதெனிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு பதிவு செய்யப்பட்ட ஒன்பதாவது தேர்தல் வன்முறை சம்பவம் இதுவென தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo0.html
வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் அடுத்த வாரம் சம்ர்ப்பிப்பு!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 04:09.09 PM GMT ]
வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள மாகாணசபையின் அமர்வில் இந்த ஆண்டுக்கான குறைநிரப்பு நியதிச்சட்டத்தின் முன்மொழிவினை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாணசபையில் வழங்கவுள்ளதாக அவைத்தலைவர் சீ. வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாகாணசபையின் அமர்வு நாளைய தினம் கைதடியில் உள்ள மாகாணசபை பேரவை செலயத்தில் நடைபெறவுள்ள நிலையில் நாளைய அமர்வு தொடர்பாக கேட்கப்பட்ட போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி போதாமலிருப்பின் அதற்காக உப வரவுசெலவு திட்டம் அல்லது குறைநிரப்பு நியதிச்சட்டம் ஒன்றை உருவாக்கும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன.
அதற்கமைவாக இவ்வருட வரவுசெலவு திட்டத்தில் உள்ள நிதி போதாமைக்காக குறைநிரப்பு நியதிச்சட்டத்தை நாளை அமர்வில் முதலமைச்சர் முன்மொழிவார்.
மேலும் 2015ம் ஆண்டுக்கான மாகாணசபையின் வரவுசெலவு திட்டம் இம்மாதம் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதற்கமைய அதற்கான ஒழுங்குகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
எனினும் நாளை அமர்வில் அது குறித்து எதுவும் பேசப்படாது. ஆனால் அடுத்த வாரம் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தை சபையில் முன்மொழிய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனை அடுத்தக்கட்டமாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
எனவே அடுத்த வாரம் வரவுசெலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZjo1.html

Geen opmerkingen:

Een reactie posten