தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி!

வீதியில் உணவு சமைத்து முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 07:40.37 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்கள் வீதியில் உணவு சமைத்து  கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பொம்மாவெளி, முதலாம் குறுக்குதெரு ஜே- 87 கிராமஅலுவலர் எல்லைக்குட்பட்ட முஸ்லிம் மக்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அன்றாட உணவுகளை சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்ட போதும் தமக்குரிய அடிப்படை வசதிகளை எவரும் செய்து தரவில்லை என்றும் நான்கு வருடங்களாக இப்படியான நிலையிலேயே தாங்கள் வசிப்பதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் வீட்டுத்திட்டத்திலும் தாங்கள் உள்வாங்கப்படவில்லை எனவும் இவற்றையெல்லாம் கண்டித்தே வீதியில் உணவு சமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks1.html
மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்!- சரத் என் சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 08:51.18 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பலர் இருக்கின்றார்கள் எனவும் அதனால் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் அரசியல் சாசன வரைவுத் திட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks3.html
தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 09:04.04 AM GMT ]
கிழக்கு மாகாணசபையில் வெற்றிலை சின்னத்தில் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்தவர், இவ்வாறு திடீரென தமிழ் மக்கள் நலன் சார்ந்த அறிக்கையினை விடுவது வெட்கக்கேடான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சி.ஜெயக்குமார் தனது அதிருப்தியை தெரிவித்தார். 
ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்றுவரை கொச்சைப்படுத்தி அதனால் அரச தரப்பினரிடம் இருந்து ஆதாயத்தை பெற்று வரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் திடீரென அதுவும் தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான அறிக்கையினை விடுவது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டி உள்ளது.
உண்மையில் இந்த அறிக்கையினை இவர்தான் விட்டாரா அல்லது வெளியிட்ட ஊடகவியலாளர் யாருக்கோ எழுதியதை தவறாக இவரது பெயரில் பிரசுரித்தாரா என்று நினைக்க வேண்டியுள்ளது.
எமது தமிழ் மக்களை பற்றி கூறும் அருகதை இவருக்கு எப்படி வந்தது. கூரைமேல் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது வியப்பாக இருக்கின்றது.
இவரது கடந்த கால செயற்பாடுகளை இந்த சந்தர்ப்பத்தில் மீட்டு பார்க்க வேண்டியுள்ளது.
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் தரப்புக்கு தாவியதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஆளும் தரப்புடன் இணைப்பதற்கு கடந்த சில நாட்கள் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயலாற்றியமையையும் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.
நாவிதன் வெளி தவிசாளர்களை அரச பக்கம் ஈர்ப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்து முடியாத தருணத்தில் அவர்களின் ஜுவனோபாயங்களில் தலையிட்டு அவர்களை பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைய செய்வதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.
இதனை அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் இவர் வெளிப்படையாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது மாத்திரம் அன்றி ஆலையடிவேம்பு திருக்கோயில் போன்ற பிரதேசங்களிலும் இவரது இந்த செயற்பாடு தொடர்ந்து இருந்தது.
இவைகள் கைகூடாத நிலையில் சீச் சீச் இந்த பழம் புளிக்கும் எனும் நரியின் நிலைமையில் இன்று இவரது கருத்து அமைந்துள்ளது.
இதைவிட வட்டமடு பிரச்சினை கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் போன்ற பல பிரச்சினைகளிலும் தலையிட்டு அம் மக்களை நட்டாற்றில் தள்ளி விட்டு அவர்களின் நிர்க்கதியான நிலைமைக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர்.
வட்டமடு பிரச்சினை எழுந்த போது அங்கே சென்ற எமது 2 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நான் உட்பட ஏனைய என் கட்சியினரையும் பார்த்து பௌத்த துறவியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் வந்தால் இந்த வட்டமடு பிரச்சினை வெற்றியளிக்காது என நேரடியாகவும் பண்ணையாளர்களை கொண்டும் கூறினார்.
தற்போது அப் பண்ணையாளர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு தங்களை நடுக்கடலில் இவர் தள்ளி விட்டதாக மனவருத்தப்படுகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் 2013 ம் ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலிலும் ஆயுதமுனையில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு காரர்களை மிரட்டியதை மறந்து விட முடியுமா?
நாவிதன் வெளி பிரதேச சபையின் உப தவிசாளராக இருந்த ஒருவரை கட்சிக்கு எதிராக செயற்பட வைத்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் உளறல் கூட சிலரை தான் நம்பி நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாகவும் மனவருத்தப்படுவதாக அறிய முடிகின்றது.
இவரது கடந்த கால செயற்பாடுகளுக்கு ஒரு மன்னிப்பு அளித்து கடந்த மாகாணசபை தேர்தல் காலத்தில் எமது தலைமைகள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க முன்வந்த போதும் அதனை உதாசீனப்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை அழிப்பதற்கும் தேசியத்திற்கும் எதிராக முழுமையாக செயற்பட்ட இவரது உதட்டிலிருந்து இவ்வாறான வார்த்தைகளை அறிக்கைகள் மூலம் விடுவதால் மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதனையும் இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனக் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks4.html

Geen opmerkingen:

Een reactie posten