இளம் டீன் ஏஜ் பெண்களை கும்பல் ஒன்றிடமிருந்து காப்பாற்றிய பெண்ணை, அதே கும்பல் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் ஃபிராங்பர்ட் அருகே நவம்பர் மாதம் 15ம் திகதி அன்று, உணவகம் ஒன்றின் கழிப்பறையில் இளம்பெண் ஒருவரின் அழுகுரலை கேட்ட Tugce Albayrak, அங்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணை அங்கே ஒரு கும்பல் தொல்லை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற போராடிய Tugce Albayrak ஒருவழியாக அந்த கும்பலை அங்கிருந்து விரட்டியுள்ளார்.
பின்னர் அந்த கும்பலில் இருந்த ஒருவர் திரும்பிவந்து, கார் பார்க்கிங்கில் இருந்த Tugce Albayrak-யை மட்டையால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் பல நாளாக கோமாவில் இருந்த அந்த பெண், மரணமடைந்தார்.
இவரது நினைவாக நேற்று முன்தினம் பெர்லினில் நடைபெற்ற ஊர்வலத்தில் 150க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணை கும்பல் தாக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும், அந்த கும்பலில் செர்பியாவை சேர்ந்த 18 வயது இளைஞன் மட்டும் தற்போது விசாரணைக்காக பொலிசார் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
http://world.lankasri.com/view.php?24AMec02dOKde2ZnBab2q0Med2Q8E0c3LBz243AlH2236AI3
|
Geen opmerkingen:
Een reactie posten