[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 02:14.34 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவோ தனிப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவோ தேர்தலில் போட்டியிடவில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம், ஊழல், வீண்விரயம் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராகவே தான் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் பொது வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல கட்சிகளை இல்லாமல் செய்து விடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்நறுவையில் இன்று தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்கள் குடும்பத்தை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை.
நாட்டில் அதிகரித்துள்ள இலஞ்சம், ஊழல், வீண்விரயம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சி என்பவற்றையே நான் எதிர்க்கின்றேன்.
மகிந்த ராஜபக்ஷ நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழிக்க தயாராகி வருகிறார். அவர் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிகளையும் தரைமட்டமாக்கி விடுவார்.
நான் அனைத்தையும் அறிந்திருக்கின்றேன். எனக்கு தெரிந்த விடயங்களை நான் எதிர்காலத்தில் கூறுகிறேன் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
தமது உயிரையும் அர்ப்பணிக்க தயார்- மைத்திரிபால
பொலன்நறுவை மக்களுக்காக தமது உயிரை அர்பணிக்க தயார் என்று ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவையில் இன்று மைத்திரிபாலவின் முதலாவது பிரசாரக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதன்போது உரையாற்றிய மைத்திரிபால,
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்த அரசாங்கம் இலங்கை மக்களுக்காக எதனை செய்தது என்று கேள்வி எழுப்பினார்.
மூன்றாவது தடவையாகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாhதிபதியானால் அவர் ஒரு சர்வதிகாரியாகவே மாறுவார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் பதவிக்கு வந்தால் விவசாயிகளின் ஒய்வூதியத்தை உயர்த்தப்போவதாக குறிப்பிட்டார்.
விடுதலைப்புலிகள் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர். எனினும் அரசாங்கம் தம்மீது புலிமுத்திரைக்குத்த முயற்சிப்பதாக மைத்திரிபால தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விரைவில் ஊவா மாகாணசபை, எதிர்க்கட்சியின் கைக்குள் வந்துவிடும் என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt2.html
அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு வார கால அவகாசம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 11:32.48 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன் போது கடந்த கால தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர்களான அனுரபிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ச, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும், அமைச்சர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்தார் என ஹசன் அலி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlu3.html
போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 11:24.50 PM GMT ]
இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று உயர் அதிகாரிகள் இவ்வாறு சாட்சிமளித்துள்ளனர்.
நாட்டில் போர்ககுற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் பொய்யான சாட்சியமளித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த அதிகாரிகளில் இருவர் தற்போது அமெரிக்காவில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சாட்சியமளித்த மூன்று அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இராணுவத்திலிருந்து கட்டாய அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட்டதன் பின்னர் இந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlu2.html
Geen opmerkingen:
Een reactie posten