தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

தன்னை அவதூறு பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்: மட்டு அரசாங்க அதிபர் சால்ஸ்



பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் மைத்திரிக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 04:34.39 AM GMT ]
பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளர் பி.டி.நுகலியத்த எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்லவில் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
2009ம் ஆண்டில் இருந்து பிரதமர் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியதாகவும் 2013 மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்கு பெறுபவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்த நிலையில் அதிக விருப்பு வாக்கு பெற்று பிரதமரின் மகனுக்கு அமைச்சுப் பதவிகூட கிடைக்கவில்லை என பி.டி.நுகலியத்த குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்திற்கு ஒரு சட்டம் ஹம்பாந்தோட்டைக்கு ஒரு சட்டம் என்றும் சபாநாயகரின் மகனுக்கு முதலமைச்சர் பதவி வழங்க முடியுமானால் பிரதமர் மகனுக்கு ஏன் வழங்க முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பிரஜையான பிரதமருக்கு செய்ய முடியாததை ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் செய்ய முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐதேகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று அரசாங்கத்தில் கறிவேப்பிள்ளை, இரம்பை போன்று உள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவை கம்பளை ஆசனத்தில் வெற்றிபெறச் செய்ய வெட்டினாலும் நீலம் என்று சொன்னவர்கள் தயாராகி வருவதாகவும் தான் விலகுவதை தடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் பி.டி.நுகலியத்த தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs0.html
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் மைத்திரிக்கு ஆதரவு
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 06:27.26 AM GMT ]
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின்  இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் கைகோர்த்துள்ளனர்.
அக் கட்சியின் உபதலைவர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரான உதய குமார் மற்றும் நுவரெலிய பிரதேசசபை உறுப்பினர் நாகராஜன் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து கொண்டுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.
மேலும் தற்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் நிதிக்கொள்கைகளுடன் முரண்பட்ட நிலையில் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து உதயகுமார் விலகியிருந்தார்.
இந்தநிலையிலேயே இன்று அவர் மைத்திபால சிறிசேனவுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளார். மலையக மக்களின் கல்வி உட்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவருக்கு தாம் ஆதரவு அளிப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs4.html
தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து: 8 பேர் காயம்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 06:50.04 AM GMT ]
தெற்கு அதிவேக வீதியின் கெலனிகம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கெலனிகம நோக்கி பயணித்த வேன் ஒன்று பின்னால் வந்த காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வேனில் பயணித்த எட்டுப் பேர் என சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs5.html
தன்னை அவதூறு பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்: மட்டு அரசாங்க அதிபர் சால்ஸ்
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 07:03.39 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெள்ளப் பெருக்கில் தவித்துக்கொண்டிருக்கும் தறுவாயில் அவர்களை காப்பாற்றி, அவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிடத்திற்கான ஏற்பாடுகளை செய்வதிலே 24 மணித்தியாலம் செலவழித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் தன்னைப் பற்றி அவதூறு கதைக்கவேண்டாம்  என மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சால்ஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கிராமத்துக்குள் வெள்ளம் புகுவதனால் அயல் கிராமங்களிடையில் பிரச்சனை ஏற்படுகின்ற போது உரிய இடத்திற்குச் சென்று அதனை தீர்ப்பதில் மும்முரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். மேலும் எமது மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான பாரிய நிதி செலவீட்டுடன் புனரமைக்கப்பட்ட பாரிய, சிறிய குளங்கள் வெள்ளம் காரணமாக உடைப்பெடுக்காத வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கூடுதலான நேரத்தினை செலவிட்டுக்கொண்டிருக்கின்றோம்.
இதற்கு மேலாக மாவட்டத்தின் தேர்தலை நியாயமான முறையின் நடாத்த வேண்டிய பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையினால், இந்த கடமையினையும், இந்த அனர்த்தத்துக்கு மத்தியில் மேற்கொள்ளும் இத் தருவாயில் என்னைப்பற்றி அவதூறாக அனாமநேய முறையில் அரசியலுடன் இணைத்து செய்திகள் எழுதுவதினை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தின் மூலை, மூடுக்கெல்லாம் செல்ல வேண்டியுள்ளது. இந்த வேலைப்பழுவினை மக்களின் அவசர தேவை காரணமாக மேற்கொள்ளும் போது இவ்வாறான அவதூறான செய்திகளினால் அதிகாரிகள் மக்கள் சார்பாக செய்யும் செயற்பாடுகளை மழுங்கடிக்கக் கூடாது.
மக்களோடு மக்களாக இருக்கும் அரச அதிகாரிகள் அனர்த்தம் ஏற்படுகின்ற போது அறிக்கைகளை விட்டுகொண்டு இருக்க முடியாது. மக்களை அனர்த்தத்தில் இருந்து மீட்டு, மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற்றும் வரை எங்களின் முழுமையான பார்வை அவர்களுடனே இருக்கும்.
அத்தோடு இதற்கான நிதியினை பெற்று அதனை உரிய முறையில் மக்களின் செயற்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் வரை நாங்கள் மிகவும் அவதானத்துடனே இருப்போம். பாரிய வேலைப்பழுவுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் போது இவ்வாறான அவதூறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது.
தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிக்கும் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. அரச அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்பட்டால் அதற்கான அறிக்கையிடுதல்களை இவர்களால் மேற்கொள்ள முடியும். அல்லது இவர்களிடம் முறையிடலாம் அதை விட்டு விட்டு அவதூறான செய்தியினை வெளியிடுவதனை தவிர்த்துக் கொள்வது சிறப்பானதாக அமையும்.
செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அந்த செய்திகளை உரியவரிடம் கேட்டு அதனை உறுதிப்படுத்துதல் ஊடக தர்மமாகும். அவ்வாறான ஊடக தர்மத்தினை பேணாமல் இணையதளங்களில் செய்தியினை வெளியிடக்கூடாது.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான செய்திகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வது மக்கள் சார்பாக செயற்படுகின்ற ஒவ்வொரு ஊடகங்களின் தலையான கடமையாகும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs6.html

Geen opmerkingen:

Een reactie posten