தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

"ஆர்காட்டான்" அமைச்சர் ஆறுமுகனின் அநாகரீக பேச்சு பதிவாகியுள்ளது (ஒலி நாடா இணைப்பு)

மைத்திரியின் கூட்டத்தில் துப்பாக்கி சூடு: வெள்ளை வேனில் வந்தவர்கள் அட்டகாசம் !

[ Dec 25, 2014 08:51:04 AM | வாசித்தோர் : 2815 ]
எதிர்கட்சியின் பொது வேட்ப்பாளரான , மைத்திரிபால சிறிசேன, நேற்றைய தினம்(24) கொலன்னாவையில் ஒரு பெரும் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். பாதயாத்திரை போல நடைபயணம் ஒன்றும் விழிப்புணர்வுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் பெரும் திரளாக மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் அங்கே ஒரு வெள்ளை வேனில் வந்த 5 நபர்கள், திடீரென இறங்கி வானத்தை நோக்கி பல தடவை சுட்டுள்ளார்கள். இதனால் மக்கள் பதறியடித்து ஓடவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை எனப் பொலிசார் தெரிவித்து உள்ளார்கள்.
இருப்பினும் மைத்திரிக்கு சேரும் கூட்டத்தை கலைத்து, மக்கள் மத்தியில் ஒரு பீதியை ஏற்படுத்த கோட்டபாயவின் கூலி ஆட்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்துவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1720.html

மகிந்தர் வேலையக் காட்ட ஆரம்பித்தார் : தபால் மூல வாக்கெடுப்பில் கடுமையான விதிமுறை மீறல்கள் !

[ Dec 25, 2014 09:00:40 AM | வாசித்தோர் : 4240 ]
நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்கெடுப்பின் போது கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றதாக, தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் குற்றஞ்சாட்டியுள்ளார். தபால் மூல வாக்கெடுப்பு நடைபெற்ற நேற்று, அரச தனியார் ஊடகங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை கடுமையான தேர்தல் விதி மீறலாகும்.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் அல்லது வேறும் ஓர் நாளில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளரிடம் கோரப்பட்டது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பில் பங்கேற்கும் நேரத்தில் இவ்வாறு நேரடி ஒளிபரப்புச் செய்வது கடுமையான தேர்தல் விதி மீறலாகும்.
தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் தினத்தில் அரச தனியார் ஊடங்களில் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிய விபரங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காடியுள்ளார். மொனராகல, பதுளை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தபால் மூல வாக்கெடுப்பு நடைபெறும் நிலையங்கள் மற்றும் அதற்கு வெளியே கடுமையான தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் 459 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1721.html

"ஆர்காட்டான்" அமைச்சர் ஆறுமுகனின் அநாகரீக பேச்சு பதிவாகியுள்ளது (ஒலி நாடா இணைப்பு)

[ Dec 25, 2014 09:15:24 AM | வாசித்தோர் : 8310 ]
தோட்டத் தொழிலாளர்களின் வியர்வை, இரத்தம் சிந்திய உழைப்பில் மாதாந்த மொய் போன்று 150 ரூபா சந்தா பணமாக அறவிட்டு தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காது தொழிற்சங்கம் என்ற பெயரில் தனது சொந்த சுகபோகங்களுக்காக பிச்சைக்கார பிழைப்பு நடத்திவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், தொழிலாளர்களை மனிதர்களாகவே மதிக்காது தெருநாய்களுக்கு போன்று பேசும் அதிர்ச்சி குரல்பதிவு ஒன்று அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
உழைக்கும் வர்க்கமான மலையகத் தொழிலாளர்களை மரியாதையாக வாங்க, போங்க என்றுகூட கதைக்கத் தெரியாத நாகரீகமற்ற இந்த விஞ்ஞான தொழிநுட்ப உலகிலும் ஆர்காட்டு பழக்கம் கொண்ட ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்கள் ஏனைய மக்களுக்கு நிகரான சக்தி படைத்தவர்களாக வாழ மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சார கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூடியுள்ள மக்களை ஆறுமுகன் தொண்டமான் கேட்டபோது, வெற்றிலைக்கு என்று பல குரல் வருகிறது. அதன்பின் 'இங்க அப்படித்தான் சொல்லுவ பிறகு நொட்டி புட்டு பொயிருவ..' வாத்து தாரவுக்கெல்லாம் ஓட்டு போட்ட அப்பறம் தண்ணில தான் போகனு..' என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1722.html

Geen opmerkingen:

Een reactie posten