தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

UN விசாரணைக் குழுவில், இரண்டாவது நிபுணராக நோபல் பரிசு பெற்ற மார்டி அதிகாரி

முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை!

இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக்குழுவில் இரசாயன பகுப்பாய்பு நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.போர் இடம்பெற்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதாக புலி ஆதரவாளர்கள் நவநீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்துள்ளனர். நவநீதம்பிள்ளை மிகவும் திட்டமிட்ட வகையில் பிரதிநிகளை நியமித்துள்ளார். வன்னியில் மனித புதைகுழிகளை தோண்டி, எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடத்தவே நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/73998.html

இலங்கையில் ஐனாதிபதி வேட்பாளரை நியமிப்பதில் அமெரிக்கா தீவிரமாம்

அமெரிக்கா அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து, இலங்கையில் மூன்றாவது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் புலம்பெயர்ந்த அமைப்புகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் காணப்படுகின்றன.
எனவே மகிந்தவுக்கு எதிராக இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற்ற மூன்றாவது வேட்பாளர் ஒருவரை நியமிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74001.html

UN விசாரணைக் குழுவில், இரண்டாவது நிபுணராக நோபல் பரிசு பெற்ற மார்டி அதிகாரி

சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான 12 பேர் கொண்ட ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியக விசாரணைக் குழுவுக்குப் புறம்பாக- அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டுவதற்காக, இரண்டு வெளியக நிபுணர்களை நியமிக்க நவநீதம்பிள்ளை முடிவு செய்திருந்தார்.
நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதியான டேம் சில்வியா கார்ட்ரைட் முதலாவது நிபுணராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பின்லாந்தின் முன்னாள் அதிபருமான மார்டி அதிசாரி இரண்டாவது நிபுணராகத் தெரிவாகியுள்ளதாக, நியூசிலாந்து வானொலி தெரிவித்துள்ளது.
எனினும், ஐநா மனிதஉரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
http://www.jvpnews.com/srilanka/74005.html

Geen opmerkingen:

Een reactie posten