| அரசாங்கம் மாற்று வழிகளில் ஈரானிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்கின்றது |
அரசாங்கம் மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஈரானிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானிடமிருந்து நேரடியாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ளாது வேறும் மூன்றாம் நாடொன்றின் ஊடாக இலங்கை ஈரானிய எரிபொருட்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு மூன்றாம் நாடொன்றிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் நாடொன்றின் ஊடாக ஈரானின் மசகு எண்ணெய் பெற்றுக் கொள்ளப்படுவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மலேசியாவிடமிருந்து இலங்கை, ஈரானிய மசு எண்ணெயை இறக்குமதி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இது தொடர்பில் புரிந்துணர் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், அமெரிக்காவுடன்; எவ்வாறான உடன்பாடு காணப்படுகின்றது என்பது பற்றி அமைச்சர் விரிவாக விளக்கவில்லை. காலத்தி;ற்கு காலம் இவ்வாறு ஈரானிடமிருந்து மூன்றாம் நாடுகளின் ஊடாக மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். |
20 Jun 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403250729&archive=&start_from=&ucat=1&
| சிறுமி மீது இராணுவச் சிப்பாய் பலாத்காரம் |
மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியிலளார் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (20) அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணதுறை, தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ பொருளியலாளராக கடமையாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் கம்பொல - நாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
கடந்த 19ஆம் திகதி 4.30 மணியளவில் முந்தல், நவதன்குலம் - வீகேன்கட்டுவ வீதிப் பிரதேசத்தில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் ஒருவரது வீட்டு கட்டுமானப்பணிகள் காரணமாக குறித்த சந்தேகநபர் முந்தல் - நவதன்குளம் பிரதேசத்திற்குச் சென்று தங்கியிருந்த நிலையில் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 |
20 Jun 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1403251658&archive=&start_from=&ucat=1&
|
|
Geen opmerkingen:
Een reactie posten