தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

யுத்தத்தை முடித்துவைத்த மகிந்தவால் 1KM பரப்பை காப்பாற்ற முடியாத அவலம்

“நான் குற்றவாளி அல்ல” ஞானசார தேரர் ஒப்பாரி

தென்னிலங்கையில் அளுத்கம பிரதேசத்தில் கடந்த ஞாயிறன்று வெடித்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டியதாக பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா மீது ஆளும்கட்சி எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்த மதவாதக் கருத்துக்களே வன்முறைகளைத் தூண்டியதாகவும், அவரது பேரணியை அதிகாரிகள் தடுக்காமல் விட்டமை தவறு என்றும் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. இந்த சூழ்நிலையில்,ஞானசார தேரரிடம் பிபிசி கேள்விகளை எழுப்பியது.
‘இந்த நாட்டில் கடும்போக்கு தீவிரவாத, அடிப்படை வாத, இனவாத குழுக்கள் இயங்குகின்றன என்பதை சுட்டிக்காட்டும் எங்களை இனவாதி என்றால் பரவாயில்லை. எங்களை இனவாதி என்றே வைத்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் கூறினேன்’ என்றார் ஞானசார தேரர்.
‘இந்த தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனநாயக வழிமுறையில் முஸ்லிம் வியாபார நிலையங்களை புறக்கணிக்குமாறு மக்களை கேட்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று தான் கூறினேன். அப்படி மக்கள் புறக்கணித்தால் பேருவளை மற்றும் அளுத்கமையில் உள்ள கடைகளுக்கு அதோ கதிதான் என்றும் நாங்கள் கூறினோம்’ என்றும் கூறினார் அவர்.
தான் கூறிய கருத்தை, முஸ்லிம் கடைகளைத் தாக்கும்படி கூறியதாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றும் ஞானசார தேரர் கூறினார்.
முன்னதாக அளுத்கமையில் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான சம்பவத்தை தொடர்ந்து இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழ்நிலை நிலவியதாகவும், அதனைத் தடுக்கும் விதத்தில் பௌத்த மக்களுக்கு தெளிவூட்டும் விதமாகவே நகரில் பெரிய அளவில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஞானசார தேரர் கூறினார்.
இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பிரச்சனை வெடிக்கும் என்ற நிலை இருந்தால், அந்தக் கூட்டத்தை நடத்தி மேலும் மோதலை வளர்க்காமல், தனிப்பட்ட ரீதியில் சமூகத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் அல்லவா என்று பிபிசி வினவியது.
‘நீங்கள் சொல்லுகின்ற எல்லாப் பேச்சுவார்த்தைகளும் நடந்துதான் இருந்தன. பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் இளைஞர்கள் கூடியிருந்தமை பற்றி பௌத்த அமைப்புகள் மீது விரல் நீட்டும் எவரும் பேசுவதில்லையே. அதுபற்றி யாரும் பேசுவதில்லை. எங்கள் மீது மட்டும் குற்றம் சாட்டவேண்டாம்’ என்றார் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர்.
BBC
http://www.jvpnews.com/srilanka/74023.html

“நீ ஒரு மதவாதி” என ரிஷாட்டை திட்டவில்லை மகிந்தரின் அலுவலம்

அளுத்கமை சம்பவம் தொடர்பில் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்ட போதும் ஊடகங்களில் உள்ளபடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும்போக்குடன் நடந்துகொள்ளவில்லை என்றும் அவ்வலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான பொறுப்பற்ற முறையிலான செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஜனாதிபதியையும் அரசையும் இனவாத கோணத்தில் சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அவ்வலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அளுத்கமை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது,அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வழிவகைகள் குறித்து அரசு முழுமையான கவனம் செலுத்தி வரும் தற்போதைய சூழ்நிலையில் , ஊடகங்கள்,குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் மேற்படி அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
அளுத்கமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அரசியல் அந்தஸ்தை தக்கவைத்து கொள்வதற்கு பல ஊடக உபாயங்களை கையாண்டாலும் அது நாட்டுக்கும் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் தமிழ்ஊடகங்கள் மற்றும் தமிழ் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைக்கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பார்த்து நீ ஒரு மதவாதி என திட்டியதாகவும் இதனால் அமைச்சரவையில் அமளி ஏற்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
https://www.facebook.com/

யுத்தத்தை முடித்துவைத்த மகிந்தவால் 1KM பரப்பை காப்பாற்ற முடியாத அவலம்

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின்போது, சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அளுத்கம, தர்காநகர் மற்றும் பேருவளை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும், அண்டையில் உள்ள வெலிப்பென்ன நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் பல எரிக்கப்பட்டன. வீடுகளும் தாக்கப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் குடும்பமொன்று மரண வீடொன்றுக்குச் செல்வதற்காக அளுத்கமையிலிருந்து வெலிப்பென்ன செல்லவேண்டியிருந்தது. அந்தக் குடும்பத்தை பாதுகாப்பாக அழைத்துச்சென்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும மீதும் வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பாலித்த தெவரப்பெரும நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சனை எழுப்பியிருந்தார்.
‘வன்முறைகளில் ஈடுபட்டவர்களை பௌத்தர்கள் என்றோ சிங்களவர்கள் என்றோ சொல்லமுடியாது. ஞானசார என்கின்றவர் நடத்துகின்ற தனியான மதப்பிரிவின் வன்முறையாளர்கள் தான் இந்த தாக்குதல்களை நடத்தினார்கள். சரியென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும்’ என்றார் பாலித்த தெவரப்பெரும. ’வாய்மூடி மௌனிகளாக வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள்’
முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடித்துவைத்த ஜனாதிபதியால் ஓரிரு கிலோமீட்டர் பரப்புக்குள் வாழும் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனதற்காக ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ என்றார் அவர்.
காவல்துறையினர் சுமார் 500 பேர் வீதியில் நின்றுகொண்டிருக்க தம்மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெவரப்பெரும கூறினார்.
சின்னப் பிள்ளைகள் 5 பேர் என்னுடன் இருந்தார்கள். கைக்குழந்தைகளும் இருந்தார்கள். வயதான தாய்மாரும் கர்ப்பிணித் தாய்மார் இரண்டுபேரும் வாகனத்தில் இருந்தனர். நான் வாகனத்தை முடிந்தவரை வேகமாக ஓட்டிவந்தேன்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் இருந்துகொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பெற்றோல் போத்தல்கள், மணல் போத்தல்கள், கற்கள். கம்புகளைக் கொண்டு தாக்கினார்கள்’ என்றார் ஐதேக எம்.பி.
அரசியல்வாதிகள் தேர்தல் காலம் வரும்வரை வாய்மூடி மௌனிகளாக இருக்காமல் மக்களின் பிரச்சனைகைளத் தீர்க்க உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.
‘வட்டரெக்க விஜித்த தேரரை கட்டிப்போட்டுத் தாக்கியுள்ளனர். என்னையும் அப்படித் தாக்குவார்கள். நீதிக்காக அப்படி அடிவாங்குவதில் பிரச்சனை இல்லை. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு, தேர்தல் வரும்வரை தங்களின் குடும்பத்தாரை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காமல் நேர்மையாகப் பேசி உயிர் விடுவது எங்களுக்கு மகிழ்ச்சி தான்’ என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெம.Palitha-MPPalitha-MP-01unp - mp
BBC
http://www.jvpnews.com/srilanka/74014.html

Geen opmerkingen:

Een reactie posten