தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

அளுத்கமவின் பெருந்துயரத்தில் நடந்தவை என்ன… பொலிசார் மீது STF குற்றச் சாட்டு!

ஞாயிற்றுக்கிழமை வெறியாட்டத்தின் பின்னர் தர்கா நகரின் எல்லா திசைகளிலிருந்தும் கருகிய வாசனையே வந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் பகுதியின் எல்லையில் விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டத்தை காணமுடிகின்றது.அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் சிங்கள கிராமங்கள் இருக்கின்றன.

வீதிமுனைகளிலும்,வீட்டுவாயில்களிலும் மக்கள் கூட்டமாகநின்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,அதிகாலையில் தங்கள் கிராமத்திற்கு வரும் இனந்தெரியாதவர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள்,
தர்கா நகரில் வாழ்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது
ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் தர்க்கா நகரில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. நள்ளிரவு நிகழ்ந்த பாரிய அனர்த்தத்தின் உணர்வுகள் அந்த அதிகாலைப் பொழுதில் தர்க்கா நகரை பற்றிப் பிடித்துள்ளன. நகரின் நுழைவாசலில் உள்ள மோட்டார் சைக்கில் கடையொன்று முழுமையாக தீ மூட்டப்பட்டுள்ளது. இன்னமும் அக்கடை புகைந்து கொண்டு இருக்கிறது. .
அவர் நேற்று இங்கு வந்தார் தர்க்கா நகரில் முஸ்லிம்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என அந்த பௌத்த துறவி தெரிவித்தார்’ என்கிறார் யூசுப். வியாழக் கிழமை சிறிய சம்பவத்திற்கு பின்னர் பதட்டம் காணப்பட்ட நிலையில் அரசாங்கம் பொதுபல சேனாவின் பேரணிக்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது என அவ தெரிவிக்கிறார்.
ஆனால் பௌத்த பிக்குகளும் சுமார் 7 000 பேரும் தங்கள் பகுதிக்கு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். அளுத்கம மேடையில் வெறுப்பு உணர்வை மத வன்முறையையும் தூண்டும் உரைகள் தாராளமாக வெளியாகி உள்ளன. ஏதோ நடக்கப் போகிறது என்ற அச்சத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வீதி முடக்குகளில் கூடி உள்ளனர். நள்ளிரவு நடக்கப் போகும் வெறியாட்டத்திற்கு ஏதுவாக முன்கூட்டியே சூழல் உருவாக்கப்பட்டடுள்ளது.
வெளியில் இருந்து வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்கள தேசத்தை பாதுகாப்பது பற்றியும் கோசங்களை எழுப்பியபடி முஸ்லிம்களின் பகுதி ஊடாக வலம் வரத் தொடங்கிய வேளையே ஆரம்ப கட்ட மோதல்கள் உருவாகின. வன்முறையை தடுப்பதற்காக பொலிஸார் உடனடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொண்டன. ஆனால் முஸ்லிம்கள் அல்லாத கும்பல் தங்களுக்குள் அணி சேர்ந்தபடி அளுத்கமவின் உள் வீதிகள் ஊடாக நடமாடிக் கொண்டிருந்தது.
பொலிஸார் எங்களை வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என உத்தரவிட்டனர். ஆனால் அந்தக் கும்பலோ சதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தது. ஊரடங்கு உத்தரவும் கண்ணீர் புகையும் எங்களுக்கு மாத்திரம் தான் அவர்களுக்கு இல்லை’ என தெரிவித்தார் தர்க்கா நகர் வாசியான என் பறீனா.
விசேட அதிரடிப் படையினர் பொலிசார் மீது குற்றச் சாட்டு
பெண்கள் அதிகளவில் விசேட அதிரடிப்படையினர் மற்றம் பொலிஸார் மீது குற்றச் சாட்டுகளை சுமத்தினர். அழிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்தக் கும்பலை தடுத்து நிறுத்த இவர்கள் எதனையும் செய்யவில்லை என அவர்கள் சுட்டிக் காட்டினர்.
நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் பேக்கரி மீது தாக்குதல் இடம்பெற்றது அதனை தடுக்க இவர்கள் எதனையும் செய்யவில்லை’ என்றார் பறீனா. முஸ்லிம் அரசியல்வாதிகள், எங்கள் கிரமத்தை பாதுகாக்க அனுப்பப்பட்ட பொலிஸார் என அனைவரும் எங்களை ஏமாற்றி விட்டனர், கைவிட்டு விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றுடன் எல்லாமே எங்களுக்கு வெறுத்து விட்டது ஆண்டவனின் கைகளுக்கு எல்லாவற்றையும் விட்டுவிட்டோம், எங்கள் சமூகத்தில் இருந்து பிரபாகரன் தோன்றவதற்கு வெகு காலம் எடுக்கது’ என்றார் அவர்.
நள்ளிரவில் இடம்பெற்ற காடையர் கும்பலின் அட்டூழியத்தினால் தர்க்கா நகர் மற்றும் அளுத்கம நகரில் வெலிப்பனை வீதியில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான பெருமளவு வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன. தர்க்கா நகரின் மலவானயில் உள்ள மசூதி முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. அதன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. புனித நூல்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
எந்த மதத்தினதும் வழிபாட்டு இடங்களை தாக்கி சேதப்படுத்துவது என்றால் அது மிருகத்தினது செயலாகத் தான் இருக்க முடியும் என்கிறார் முகமது நஜீத். அந்த நள்ளிpரவில் மசூதிகள் கூட தாக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
வெலிப்பிட்டிய மோதல்
வெலிப்பிட்டியவில் சிங்கள முஸ்லீம்கள் மத்தியில் இடம்பெற்ற நேரடி மோதலில் ;அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டனர்.வெலிப்பிட்டிய மசூதியை காப்பாற்றுவதற்காக அந்த ஊர் எல்லையில் திரண்டிருந்த ஆண்களை நோக்கி முஸ்லீம்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பியபடி பெற்றோல் குண்டுகளையும் கற்களையும் வீசிய படி காடையர் கும்பல் முன்னோக்கி நகர்ந்த வேளையே மோதல் ஏற்பட்டது.
எங்களுடைய பெண்கள் அனைவரும் பாதுகாப்பிற்காக மசூதிக்கு சென்று விட்டனர் நாங்கள் எங்கள் பெண்களையும் மசூதியையும் காப்பாற்ற தேவைப்பட்டால் சண்டை இடுவது எமது உரிமை என நினைத்தோம் என்கிறார் வெலிப்பிட்டிய மோதலில் தனது நெருங்கிய உறவினரை இழந்த முகமட் ரிஸ்கான்.
3 மணித்தியாலங்களாக மோதல் நடைபெற்றது பொலிஸாரையும் விசேட அதிரடிப் படையினரையும் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி பொதுமக்கள். அந்த வீதி முழுவதும் இரத்தக் கறைகளும் பெற்றோல் குண்டுகளின் எச்சங்களும் இரும்புத் துண்டங்களும் கைவிடப்பட்ட செருப்புகளும் காணப்படுகின்றன. உயிரிழப்பு ஏற்பட்ட பகுதி என்பதால் பொலிஸார் அதனை சுற்றி வளைத்துள்ளனர்.
முகமட் சிராஷ், முகமட் இம்ரன், முகமட் சகுரன் என்ற 3 முஸ்லிம்கள் பின்னர் காயங்களுக்கு பலியாகினர். துப்பாக்கிச் சூட்டினாலேயே இந்த காயங்கள் ஏற்பட்டது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனது சகோதரர் பெண்களைப் பாதுகாப்பதற்கு முயன்ற வேளை வயிற்றிலும் தலையிலும் சுடப்பட்டதாக தெரிவிக்கிறார் அம்ரானின் சகோதரர். போலிஸாரே அவரை காயங்களுடன் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அவர்கள் 2 மணித்தியாளங்களாக எங்களுடன் நேரடியாக மோதலில் ஈடுபட்டனர். அதுவரை எந்தப் பொலிஸாரும் அங்கு வரவில்லை என தெரிவித்தார் ஹீசைன்.
மோதலில் 7 பேர் காயமடைந்தனர்
பொலிஸார் இறுதியாக 1 மணிக்கு வந்து சேர்ந்த வேளை 7 பேர் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர் என தெரிவிக்கிறார் ஹீசைன் மோதல்கள் முடிந்து பல மணி நேரத்திற்கு பின்னும் அந்தப் பகுதி மக்கள் உரிய நேரத்திற்கு வராத பொலிசாரை குற்றம் சாட்டுகின்றனர்.
பொலிஸ்
அளுத்கமவிலும் ஏனைய பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மோதல் மூண்டதால் தங்களுக்கு அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கான ஆள்பலம் இருக்கவில்லை என்கின்றனர் பொலிஸார்.பல பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மோதல்கள் இடம்பெற்றன,முஸ்லீம் பகுதிகளுக்கு செல்வதற்கு நாம் முயன்ற வேளை சிஙகள காடையர்கள் எங்களை தாக்கினர்,நாங்கள் முஸ்லீம்களை பாதுகாப்பதில் மாத்திரம் அக்கறையாகயிருப்பதாக குற்றம் சாடடினர் என மூத்த பொலிஸ் அதிகாரியொருவர் வெலிப்பி;ட்டியவில் தெரிவித்தார்.ஆனால் முஸ்லீம் மக்கள் நாங்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் என்றார் அவர்.
யாருடைய நிகழ்ச்சி நிரல்
வெலிப்பிட்டியவின் சிங்களகிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுடைய அயல் கிராமத்தின் நிலை குறித்து கவலையும் வேதனையும் வெளியிடுகின்றனர்.அந்த கிராமத்து மக்களை எங்களுக்கு நன்கு தெரியும் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த பகையுமில்லை நாங்கள் நல்ல நண்பர்கள் நேற்றிரவு வந்தவர்களை எங்களுக்கு அடையளாம் தெரியவில்லை அவர்கள் எங்கள் ஊர்க்காரர்களில்லை என்கிறார் லசந்த. இது வேறு எவரிடையதோ நிகழ்ச்சிநிரல் என்றும் அவர் குறிப்பிட்டார்;
வீடுகளும் அலுவலகங்களும் தீக்கிரையாகின
தர்கா நகரின் மில்டன் வீதியிலும் அதே கதைகளை கேட்கக்கூடியதாகயிருந்தது,இங்கு முஸ்லீம்களக்கு சொந்தமான பல வீடுகளம் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன,ஆடைத்தொழிற்சாலையோன்று தீயில் எரிந்துகொண்டிருந்தது, புகை மண்டலமும் சாம்பலும் விண்ணைதொட்டுக்கொண்டிருந்தன,கட்டிடத்திற்குள்ளே பல வாகனங்கள் எரிந்தகொண்டிருந்தன.அந்த வுPதிக்கு அப்பால் ஒரு பாலர்பாடசாலையும் கராஜ் ஒன்றும் தீயில் கருகியிருந்தன.அருகில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் வீதியில் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்ததை காண மடிந்தது. ஞாயிற்றுக் கிழமை சம்பவம் குறித்து அவர்கள் தலையை விரக்தியுடன் ஆட்டினர். அவர்கள் 3 தரம் வந்தனர் 2 தரம் துரத்தி அடித்தோம் 3ம் தரம் பெரும் கும்பலுடன் வந்தனர். இந்த நிலையிலேயே மோதல் மூன்றது என்றார் பொலிஸ் காரரான ஈபேட் சில்வா. அந்த கும்பலில் இருந்த எவரையும் தன்னால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை இழந்த மனநிலை
அளுத்கம முழுவதும் நம்பிக்கை இழந்த மனநிலையை காண முடிந்தது. படையினர் மத்தியில் கூட இது காணப்பட்டது. எங்களுக்கு வேறு வழியில்லை நிலைமை மோசமானதை தொடர்ந்து காடையர் கும்பலை அடித்து விரட்டினோம் என்றனர். ஷஷஇவை அனைத்திற்கும் பௌத்த துறவிகளே காரணம் அவர்களே கிராமத்தவர்களை தூண்டி விட்டனர்’ என்றும் தெரிவித்தனர் விசேட அதிரடிப்படையினர்.
இந்த சம்பவங்கள் நடந்த பிறகு பெரும்பாலானவர்கள் மனித உரிமை குறித்து பேசியதை கேட்க முடிந்தது. அளுத்கம வெலிவேரியா போன்ற இடங்களில் வன்முறைக்கும் துயரங்களுக்கும் பின்னர் இவ்வாறான விவாதங்களை கேட்க முடிகின்றது.
ஆனால் வர்த்தகத்தை நம்பி வாழ்ந்த இந்த மக்களுக்கு இறுதியில் எல்லாமே பொருளாதாரம் சம்பந்தமானது. அவர்கள் எங்களை தாக்கினர் எங்கள் வர்த்தகங்களை அழித்தனர் எங்கள் வயிற்றில் அடித்தனர். இறுதியில் எங்களை முடித்து விட்டனர் என்றார் பறீனா. அவர் வீடுகளும் கடைகளும் தாக்கி அழிக்கப்பட்ட வேளை பொலிஸாரும் படையினரும் வேடிக்கை பார்த்ததை கண்டதாக தெரிவித்தார்.AluthgamaAluthgama-01Aluthgama-02Aluthgama-04Aluthgama-08Aluthgama-07Aluthgama-06Aluthgama-05Aluthgama-03Aluthgama-09Aluthgama-10Aluthgama-11Aluthgama-12Aluthgama-13Aluthgama-14Aluthgama-15Aluthgama-16Aluthgama-17Aluthgama-18Colombo-Muslim-02Colombo-Muslim-01Colombo-Muslim-04Colombo-Muslim-03Colombo-Muslim-05Colombo-Muslim-06140616225349-sri-lanka-aluthgama-2-horizontal-galleryOLYMPUS DIGITAL CAMERA
 (The agony of Aluthgama) – Dharisha Bastians – தமிழில் ரஜீவன்
http://www.jvpnews.com/srilanka/73931.html

Geen opmerkingen:

Een reactie posten