தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

அடையாள அட்டை கொடுத்து அகதிகள் என்றனர்!

புத்தர் நாட்டினில் குண்டுகள்

வெடித்து உயிர்கள் சிதைவது கண்டேன்!!
கடைவீதியில் வெடித்த குண்டுகள்
காவு வாங்கிய குடும்பத்தில்
நான் மட்டும் மிச்சம்!!
தப்பித்து ஓடினேன்
கடலுக்கு அப்பால் ஒருவன் சகோதரன் என்றான்
கடலை தாண்டி சென்றதும் புரிந்தது கதைக்கிறான் என்று!!
என்னை உலகுக்கு அடையாளம் காட்டுவேன் என்றவர்
அடையாள அட்டை கொடுத்து அகதிகள் என்றனர்!!
என்னை வைத்து சினிமா படம் எடுத்தனர்.
என்னை வைத்து
ஆட்சியை கலைக்கவும் செய்தனர்,
ஆட்சியை பிடிக்கவும் செய்தனர்!
என் இனைத்தை அழித்தவன்
கிரிக்கெட் பார்க்க வரும்போது போராட்டம்
பதவியேற்புக்கு வரும்போது போராட்டம்
இதில் கொஞ்சத்தை
எங்கள் வாழ்வுக்காக போராடியிருக்கலாம்!!
நிலக்கடலில் சிவப்பு நிறத்தில்
ஒரு சுரைக்காய் தேசம்
பச்சை தமிழில் ஒரு குரல் கேட்டது
கொஞ்சம் பொறு முடிந்துவிடும் என்று
அவன் என் இனம் அழிவதை சொல்கிறானா?அல்லது
என் இனத்துக்கு எதிரான போர் முடிவதை சொல்கிறானா?
என்று புரியாமல் ஒன்றும் செய்ய இயலாதவனாய் நின்றேன்
உங்களுக்கு புரியுமபடி சொன்னால்
ஆதரவற்ற அகதியாய்…
ச.ஸ்ரீராம்idp-01idp
நன்றி விகடன்
http://www.jvpnews.com/srilanka/73908.html

Geen opmerkingen:

Een reactie posten