தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பிரிக்க சதித்திட்டம்! விழிப்புடன் இருக்க வேண்டும்-எச்சரிக்கிறார் அரியநேந்திரன்

ஞானசார தேரரை காப்பாற்ற பொய்யுரைக்கும் பொலிஸ் மா அதிபர்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 07:07.33 AM GMT ]
தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை எனவும் சம்பவம் குறித்து மட்டுமே விசாரணை நடத்த முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் காரணமான தூண்டிவிடும் வகையிலான கருத்துக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வந்த நிலையில், அந்த அமைப்பின் தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் எந்த அமைப்பாக இருந்தாலும் எந்த தரத்தில் இருக்கும் நபராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுபல சேனா அமைப்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அளுத்கமவில் அமைதியான கூட்டத்தை நடத்தியிருந்தது.
அண்மையில் நடத்த அனுமதி வழங்கப்பட்ட கூட்டத்தை புத்தசாசன பாதுகாப்புச் அதிகார சபைக்கு நடத்தியது. பொதுபல சேனா அமைப்பு அனுமதி வழங்கவில்லை.
இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் பொலிஸார் பௌத்த மற்றும் முஸ்லிம் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசியதுடன் எந்த விதமான குழப்பமான நிலைமைகளும் ஏற்படாது என பொலிஸாருக்கு உறுதி வழங்கப்பட்டது.
எனினும் இந்த கூட்டத்தின் பின்னர், கூட்டத்துடன் தொடர்புடைய வாகனங்கள் தர்கா நகர் ஊடாக பேரணியாக சென்ற நிலையில் இந்த மோதல் ஆரம்பித்துள்ளது.
சம்பவங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய 55 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 48 பேர் சிங்களவர்கள். 7 பேர் முஸ்லிம்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகள் ஏதாவது ஒரு நகருக்கு செல்வதையோ கூட்டங்களை நடத்துவதையோ தடுக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahv3.html
நாட்டில் இருந்து வெளியேறுங்கள்: ஜனாதிபதிக்கு சோதிடர்கள் ஆலோசனை
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 07:37.25 AM GMT ]
குரு பெயர்ச்சி இடம்பெற்று வரும் இந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக நாட்டில் இருந்த வெளியேறி வெளிநாட்டில் தங்கியிருக்குமாறு ஜனாதிபதிக்கு சோதிடர்கள் எச்சரிப்புடன் கூடிய ஆலோசனையை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நேற்று காலை 8.31 மணிக்கு குரு பெயர்ச்சி இடம்பெற்றது.
இந்த நிலையில், சோதிடர்களின் ஆலோசனையை பொருட்படுத்தாது ஜனாதிபதி நாடு திரும்பியதால் சோதிடர்கள் குழப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சியினால் ஏற்படும் பாதகங்களை தவிர்ப்பதற்காக 100 பிக்குமாருக்கு தானம் வழங்கி விட்டு, மாலைதீவு நாட்டுக்காவது சென்று சில நாட்கள் தங்கியிருக்குமாறு சோதிடர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைகளில் ஜனாதிபதி எப்படியான தீர்மானங்களை எடுப்பார் என்பதை கணித்து கூறமுடியாதிருப்பதாக அலரி மாளிகையின் தகவல்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahv5.html
மொரகொட மற்றும் போகொல்லாகம அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்?
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 07:45.23 AM GMT ]
முன்னாள் அமைச்சர்களான ரோஹித்த போகொல்லாகம மற்றும் மிலிந்த மொரகொட ஆகியோரை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், தமது பதவியை இராஜினாமா செய்யுமாறு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடிகை மாலினி பொன்சேகா மற்றும் ஜே.ஆர்.பி. சூரியபெரும ஆகியோருக்கு நேற்று முற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
மாலினி பொன்சேகா மற்றும் சூரியபெரும ஆகியோருக்கு ஆளுநர் பதவிகளை வழங்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படும் ரோஹித்த போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சராகவும் மிலிந்த மொரகொடவை நகர அபிவிருத்தி அமைச்சராக நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahv6.html
தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பிரிக்க சதித்திட்டம்! விழிப்புடன் இருக்க வேண்டும்-எச்சரிக்கிறார் அரியநேந்திரன்
[ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2014, 08:04.12 AM GMT ]
அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்திற்கு சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது. 
ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபலசேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு திரை மறைவில் சதிவேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியக்கூடியதாகவுள்ளது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தாலை அடுத்து வாழைச்சேனை மற்றும் காரைதீவு பிரதேச தமிழ் கிராமங்களில் புகுந்து தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாகனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவங்களால் எமது மக்கள் கவலையடைந்துள்ளனர். முஸ்லிம் மக்கள் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த புரிந்துணர்வின் அடிப்படையிலேயே மேலும் ஒரு தமிழ் முஸ்லிம் குழப்ப நிலை இங்கு உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.
இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இனக்குரோதத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அளுத்தகம, பேருவளை சம்பவத்தை மூடி மறைப்பதற்கு முயல்கிறார்கள்.
அப்படிச் செய்வது அரசுக்கு வாய்ப்பாக அமையும். இதேபோன்ற பல சம்பவங்களை 1990ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் மேற்படி பிரதேசங்களில் சில சக்திகள் நடத்தி வெற்றியும் கண்டுள்ளன என்பதை மறக்கமுடியாது. எனவே ஹர்த்தால் அனுஷ்டிக்கும் முஸ்லிம் சமூகம் இவ்வாறான வேளைகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக தமிழ் மக்கள் இவ்விடயத்தில் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRULahv7.html

Geen opmerkingen:

Een reactie posten