தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 juni 2014

வவுனியாவில் காணாமல் போனவர் சிறையில்! கைது செய்த பொலிசார் மழுப்பல்..

வவுனியாவினில் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா சிறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் முள்ளியவளையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி ஜெயன் என்பவர் கடந்த மாதம் 27ம் திகதியன்று தனது பிள்ளையின் சிகிச்சை நிமித்தம் வவுனியா வைத்தியசாலைக்கு செனறுள்ளார். எனினும் இவர் அடுத்த நாளான 28ம் திகதி மதியம் முதல் காணாமல் போயிருந்தார். இவர் காணாமல் போனது பற்றிய முறைப்பாடு குடும்பத்தவர்களினால் முள்ளியவளை பொலீஸாருக்கு செய்யப்பட்டிருந்தது.

அதே சமயம் முன்னதாக காணாமல் போனவர் பற்றி முறையிடச் சென்றவர்களை வவுனியா பொலீஸார் உங்கள் மாவட்டத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறி திருப்பியனுப்பியுள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட தடவைகள் வவுனியா பொலீஸ் நிலையத்திற்கு சென்றும் பலன் கிடைத்திருக்கவில்லை. இறுதியில் இறந்த ஒருவரின் உடலை பொலீஸார் காட்டிய போதும் அது காணாமல் போனவருடையதாக இருந்திருக்கவில்லை. சளைக்காது தொடர்ந்து தேடிய குடும்பத்தினர் வவுனியா சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினை பின்னர் கண்டறிந்துள்ளனர்.
வவுனியா நகரில் நடந்த தகராறு ஒன்றில் பார்வையாளராக நின்ற இவர் வவுனியா பொலீஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி உட்பட அனைத்தையும் பறித்த பொலீஸார் அவரது குடும்பத்தாருக்கு கூட அறிவித்தல் கொடுக்கவில்லை. அதே பொலிஸ் நிலையத்தில் தேடித் தேடி திரிந்தும் பொலிஸார் தகவல் கொடுக்காமை மூலம் எமது மக்கள் எவ்வளவு கேவலமான முறையில் பொலீஸாரால் நடாத்தப்படுகின்றார்களென்பது அம்பலமாகியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/72192.html

Geen opmerkingen:

Een reactie posten