இவர்கள் அண்மைக்காலமாக பாடசாலைக்கு சென்றுவரும்போது டிப்பர் சாரதி இம்மாணவர்களை கண்டு தினமும் தம்முடன் வருமாறும், தாம் உங்களைச் சந்தோசமாக வைத்திருப்பேன் என ஆசைவார்த்தை கூறிவந்துள்ளார்.
அதேபோல் நேற்றும் இவர்களை அழைத்த போது இவருடன் செல்வதற்கு ஏற்கனவே தயார் செய்தபடி வந்த சிறுவர்கள், பெற்றோருக்குத் தெரியாமல் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறியுள்ளனர். அதன் பின்னர் பாடசாலைச் சீருடையை மாற்றி வேறு உடை அணிந்து, டிப்பர் சாரதியுடன் ஏறிச் சென்றுள்ளனர். டிப்பர் சாரதியும் அவர்களை ஏற்றிக் கொண்டு அநுராதபுரம் தாண்டிச் சென்ற போது அச் சிறுவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
உணவுற்காக கடை ஒன்றில் டிப்பரை நிறுத்திய போது இரு சிறுவர்களும் ஓடித் தப்பியுள்ளனர்.இரவு நேரத்தில் வழி தெரியாது தடுமாறிய சிறுவர்கள் வீதியால் வந்த இராணுவத்தினரிடம் வழி கேட்டுள்ளனர். சந்தேகம் கொண்ட இராணுவ சிப்பாய்கள் இருவரையும் அருகிலிருந்த பிரியந்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச் சிறுவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் தற்போது டிப்பர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6938
Geen opmerkingen:
Een reactie posten