தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

அகதிகளுககாக போராடிய சமயத் தலைவர்கள் அவுஸ்ரேலியாவில் கைது

EPDP உதவியுடன் வல்வெட்டித்துறையில் TNA சாதனையாம்

பொது மக்களினதும், மரக்கறிச்சந்தை வர்த்தகர்களினதும்,வர்த்தக சங்கத்தினரதும் கோரிக்கைக்கு அமைய மரக்கறிச் சந்தைக் கட்டடத்தில் சாந்திக் கிரிகைகளைச் செய்து இன்று புதன்கிழமை கையளிக்கப்போவதாக அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் ந.அனந்தராஜ் சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற போதும், பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் அதற்கான சமயக் கிரிகைகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் கையளிக்குமாறு தவிசாளரால் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைய இன்று புதன்கிழமை வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ.சோ.தண்டபாணிதேசிகர் அவர்களால், சமயக் கிரிகைகள் நடத்தப்பட்டு சாந்தி செய்யும் சமய நிகழ்வு இடம் பெற்று அவரால் திறந்து வைக்கப்பட்டபின், மரக்கறிச் சந்தையை செயலாளர் உத்தியோகபூர்வமாகக்கையளிக்கவுள்ளது. இந் நிகழ்வில் நகரசபை அலுவலர்கள்,உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் வல்வெட்டித்துறையின் பொது அமைப்புக்கள் உட்பட பொது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் நகரசபையின் பிரதி தலைவர் மற்றும்; கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்களைப் புறந்தள்ளி அவர்களிற்கு அழைப்புக்கள் கூட வழங்காது எதிர்கட்சியான ஈபிடிபி உறுப்பினர்களது ஆதரவுடன் இக்கட்டடம் திறந்து வைக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. தனது சகபாடிகள் அதிகாரத்திற்கு வரவோ மக்களது அங்கீகாரத்தை பெறவோ விடாது இவ்வாறு எதிர்தரப்பிது ஆதரவை பெற்று திறந்து வைப்பது வாக்களித்த மக்களிற்கு செய்யும் துரோகமென பிரதி தலைவர் சதீஸ் கவலை வெளியிட்டுள்ளார்.Market-Vailvi
http://www.jvpnews.com/srilanka/74497.html

இன வன்முறைகளின் பின்னணியில் அரசாங்கம்: மங்கள

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் கலகங்களுக்கு அமெரிக்காவோ அல்லது சவூதி அரேபியாவோ பொறுப்பு ஏற்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறைகளில் ஈடுபட்ட 13 பேரை விடுதலை செய்யுமாறு உயர் மட்டத்திலிருந்து காவல்துறையினருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளின் போது காவல்துறையினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடாது தர்கா நகருக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பார்வையிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சினைகளை மூடி மறைத்து முஸ்லிம் கடும்போக்குவாதம் நிலவி வருவதாக பிரச்சாரம் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜிஹாதிய இயக்கம் பற்றிய தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். கடும்போக்குவாத குற்றச்சாட்டுக்ளை அரசாங்கத்தின் குற்றங்களை மூடிமறைக்க முயற்சி;க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74501.html

அகதிகளுககாக போராடிய சமயத் தலைவர்கள் அவுஸ்ரேலியாவில் கைது

religious leadersஅன்பு வழியை ஏற்படுத்தும் என்ற பெயரில் அணிதிரண்டுள்ள சமயப் பிரமுகர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள 983 பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யும் போராட்டத்தை மேற்கொள்கிறார்கள். இந்தப் பிள்ளைகள் விடயத்தில் மத்திய அரசாங்கம் காருண்ய கொள்கையை அனுசரிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
அடிலெயிட் ஹில்ஸ் பிரதேசத்தில் மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமி பிரிக்ஸின் அலுவலகத்திற்கு முன்னால் சத்தியப் பிரமாணம் செய்த சமயப் பிரமுகர்கள், துணிகளால் செய்யப்பட்ட பொம்மைகளைக் கையிலேந்தியிருந்தார்கள். சமகால குடிவரவுக் கொள்கை எந்தளவு மனிதாபிமானத்திற்கு புறம்பானதாக இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துவது அவர்களின் நோக்கம்.
நேற்றைய நாள் முழுதும் நீடித்த போராட்டத்தைக் கண்டித்த பொலிஸார், மாலை 6.30 அளவில் ஸ்தலத்திற்கு விரைந்து சமயத் தலைவர்களைக் கைது செய்தார்கள்
http://www.jvpnews.com/srilanka/74503.html

Geen opmerkingen:

Een reactie posten