[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 09:44.57 AM GMT ]
சிரிமல் விஜேசிங்க எனும் சிங்களத் திரைப்பட இயக்குனருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர் வேற்றுக்கிரக வாசிகளும், ஏழு சிறுவர்களும் (பிட்டசக்வல வெசியன் ஹா பெஞ்சொ ஹதய்) எனும் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
இந்நிலையில் பொது பல சேனாவின் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள இவர், அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விவரணத் திரைப்படமொன்றை தயாரிக்க முற்பட்டுள்ளார்.
அதற்கான ஒரு கட்டப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அவர் தனது குழுவினருடன் நெதர்லாந்து செல்வதற்காக அண்மையில் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து தெரிய வந்தது முதல் பொது பல சேனாவினர் அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடத் தொடங்கியு்ள்ளனர்.
தற்போதைய நிலையில் அவருடைய குடும்பத்தினரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இயக்குனர் சிரிமல் விஜேசிங்க மற்றும் அவரது உறவினர் வீடுகளுக்குச் சென்றுள்ள புலனாய்வுப் பிரிவினர் அவர் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக இயக்குனர் சிரிமல் தற்போது தலைமறைவு வாழ்க்கையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr0.html
மங்கள சமரவீர கைது? பாதுகாப்பு அமைச்சு உத்தரவு!
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:19.32 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் காரணமாக அண்மைக்காலமாக நாட்டில் இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரே இச்செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் விசேட புலனாய்வுப் பிரிவு தொடர்பான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
பொதுபல சேனா அமைப்பினருடன் அரசாங்கத்துக்குள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையின மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக அரசாங்கம் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச கடும் சினமடைந்துள்ளார்.
நேற்று இரவு அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரா வாகிஷ்ட, சட்டமா அதிபர் ஆகியோரை அழைத்து திட்டித்தீர்த்துள்ளார்.
மங்கள சமரவீரவை உடனடியாக தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யுமாறு அவர் சீறியுள்ளார்.
தற்போதைய நிலையில் அரசமைப்புச் சட்டத்தின் தேசிய பாதுகாப்பு இரகசியங்கள் தொடர்பான 1955/32 பிரிவின் கீழ் மங்கள சமரவீரவைக் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை தற்போது பாதுகாப்பு அமைச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr1.html
பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் பேஸ்புக் கணக்கும் முடக்கம்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 10:20.09 AM GMT ]
ஏற்கனவே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே தடை செய்திருந்தது.
இனவாத ரீதியான பதிவுகளை திலந்த விதானகே தனது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றியிருந்தன் காரணமாகவே அவரது கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பேஸ்புக் வலைத்தளத்தில் கணக்குகளை கொண்டுள்ளவர்கள், இனவாத பதிவுகளை மேற்கொள்ளும் கணக்குகளுக்கு எதிராக தமது கணக்குகளில் பதிவுகளை செய்து வந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnr2.html
Geen opmerkingen:
Een reactie posten