தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 juni 2014

கவுரக் கொலையிலிருந்து தப்பிய இளம்பெண் (வீடியோ இணைப்பு) !

பாகிஸ்தானில் கவுரவக் கொலையில் இருந்து இளம்பெண் ஒருவர் அதிஷ்டவசமாக தப்பித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீஸாபாத் பகுதியை சேர்ந்த சபா மக்சூத் என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளாக முஹம்மது குவைசர் என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
தனது குடும்பத்தாரின் சம்மதத்தை பெறாமல், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியர் வசித்து வந்த பகுதிக்கு சென்ற சபாவின் தந்தை மற்றும் அவர்களது உறவினர்கள் அவரை ஹபீஸாபாத்துக்கு தூக்கி வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மேலும் சாக்குப் பை ஒன்றில் அவரது உடலை திணித்துக் கட்டி, வீட்டோரம் பாயும் பெரிய கால்வாயில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் சாக்குப் பைக்குள் கிடந்த சபா, கட்டை அவிழ்த்துக் கொண்டு, தட்டு தடுமாறி கால்வாயில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்தார்.
இதன்பின் அங்கிருந்த சிலரின் உதவியுடன் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு வந்து சேர்ந்த அவர், அங்கிருந்தவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி உதவி கோரினார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவசர ஊர்தியை அழைத்து அவரை மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
கவுரவக் கொலையிலிருந்து உயிர்பிழைத்து தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Geen opmerkingen:

Een reactie posten