[ சனிக்கிழமை, 07 யூன் 2014, 02:09.35 AM GMT ]
இலங்கையில் சவூதி அரேபியாவுக்கு செல்லும் பணிப்பெண்களின் நலன் கருதி இலங்கையும் சவூதியில் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டன.
இந்த உடன்படிக்கைக்கு அண்மையில் சவூதியின் சூரா சபை தமது அனுமதியை வழங்கியுள்ளது.
இந்தநிலையில் உடன்படிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் பணிப்பெண்கள் நன்மைகளை பெறுவர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய கரையோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது
இந்திய கரையோர காவல்படையினர் நேற்று 12 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டமைக்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் எல்லை மீறி வந்தமையை ஐசிஜிஎஸ் என்ற கண்காணிப்பு கப்பல் கண்டறிந்து அவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றியது.
பின்னர் அதில் இருந்த 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த 33 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் இந்தியாவிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே இலங்கை மீனவர்களின் கைது இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTbLZex2.html
இலங்கையில் இடம்பெறும் குற்றங்களில் 18வீதமானவை படையினரால் மேற்கொள்ளப்படுகின்றன!
[ சனிக்கிழமை, 07 யூன் 2014, 01:09.10 AM GMT ]
இந்தநிலையில் படையினருக்கு தற்போது நிபுணர்கள் மனவள ஆலோசனைகளை வழங்கி வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனவள விரிவுரையாளர் பிரபாத் குணதிலக்கவின் கருத்துப்படி கடந்த 30 வருட காலத்தில் இருந்து எதிர்பார்த்த இராணுவத்தினருக்கான மனவள ஆலோசனைகள் உரிய வகையில் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
போரில் ஈடுபட்ட வீரர்கள் பொதுமக்களுடன் பழகும் போது மேற்கொள்ள வேண்டிய பண்புகளை அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கவேண்டும்.
இதேவேளை போரின் பின்னர் படைகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் வீரர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களே அதிக குற்றங்களில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் தற்போதுள்ள இலங்கையில் உள்ள 350, 000 படையினரையும் பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரியவின் தகவல்படி, தற்போது இராணுவ வைத்தியசாலையில் 200 வீரர்கள் வரை, மனநல வாட்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் 2012 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து விலகிய சரத் அபேக்கோன் என்ற இராணுவ வீரர், தாம் வீதியில் செல்கின்ற போது நாற்றம் வீசினால் உடனடியாக பழைய போர் நினைவுகளே வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தம்மால் பொதுமக்களுடன் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTbLZex1.html
Geen opmerkingen:
Een reactie posten