இங்கிலாந்தில் காபி ஷாப் ஒன்றில் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்மணிக்கு விபச்சாரி பட்டம் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கென்ட் பகுதியை சேர்ந்த ரியா ஹோலே (27), தனது தோழியுடன், தெற்கு லண்டனிலுள்ள கோஸ்டா காபி ஷாப்புக்கு சென்றுள்ளார்.
இருவருமே தங்களது பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்திருந்தனர். அப்போது ரியாவின் 11 மாத கைக்குழந்தை ஆர்தர் தூக்கத்தில் இருந்து விழித்து பசியால் அழுதுள்ளான்.
இதனால் ரியா, தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதை பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி, உனக்கு அறிவில்லை, பொது இடத்தில் பால் கொடுக்கிறாயே, இதெல்லாம் தப்பு என்று தெரியாதா விபச்சாரி என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்டதும், ரியா அழுதுகொண்டே அங்கிருந்து விரைந்து சென்றுவிட்டார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், அந்த காபி ஷாப்பில் ஏற்கனவே பலரும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை பார்த்துள்ளேன். எனவே யாரும் தடை சொல்லமாட்டார்கள் என்றுதான் நானும் அவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரியா அழுது கொண்டு வெளியேறியதை பார்த்த காபி ஷாப் ஊழியர்கள், இதற்கு காரணமான ஜோடியை கடையைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின், 2010ம் ஆண்டு சமத்துவ சட்டப்படி, பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் ஒரு பெண்ணை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறுவது தவறாகும்.
|
Geen opmerkingen:
Een reactie posten