தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 juni 2014

ஐநா விசாரணைக் குழுவில் இலங்கைக்குள் நுளைகிறார் முக்கிய நீதிபதி டேம் சில்வியா !

கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக பணியாற்றும், டேம் சில்வியா கார்ட்ரைட், அந்தப் பதவியை துறந்து விட்டு, சிறிலங்கா குறித்து விசாரணைக் குழுவுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக் குழுவுக்கு, நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதி, டேம் சில்வியா கார்ட்ரைட்டை தெரிவு செய்துள்ளதற்கு, நியூசிலாந்தின் தொழிற்கட்சி வரவேற்புத் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா விசாரணை நடத்தக் கோரிய தீர்மானத்துக்கு நியூசிலாந்து ஆதரவு அளிக்கவில்லை.
இந்தநிலையில், டேம் சில்வியா கார்ட்ரைட் இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதை அந்த நாட்டின் தொழிற்கட்சி வரவேற்றுள்ளது.
இது பொருத்தமான நியமனம் என்று அந்தக் கட்சியின் மனிதஉரிமைகளுக்கான பேச்சாளர் மர்யான் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளார்.
நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதன் மூலம் அவர், நியூசிலாந்தின் புகழை நிலை நிறுத்த வேண்டும் என்றும் அந்த நாட்டு தொழிற்கட்சி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/73912.html

Geen opmerkingen:

Een reactie posten