யாழ் வரணியில் தொலைபேசியால் வந்த விணை தூக்கில் தொங்கி இளைஞர்
இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது தனது மகன் உரும்பிராயைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை காதலித்துவந்தார் எனவும் இதனையடுத்து திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருமணத்திற்கு திகதியும் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன எனவும் இந்நிலையில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயமுறுத்திவந்துள்ளனர்.
எனவும் இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தபோதிலும் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாமெனக் தாம் கூறியதாகவும் தான் இவருக்கு இன்று மதிய உணவு கொடுத்தபோதும் நேற்று மதியமும் தொலைபேசியில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தன்னிடம் தெரிவித்ததார்.
எனவும் அதற்கு தான் அச்சமடையவேணடாமென கூறிவிட்டு அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றார் எனவும் ஆலயத்திற்கு சென்ற தனக்கு இவர் தூக்கில் தொங்கிக் கிடக்கிறார் எனக் கிடைத்த தகவலை அறிந்து தான் வீட்டுக்கு வந்ததார் எனவும் அங்கு இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
எனவும் இளைஞரின் தாயார் தெரிவித்தார். வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி கிருபாகரன் (வயது 30) என்பவரே மரணமானவராவார். இவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமையே தனது 30ஆவது பிறந்த தினத்தை திருமணத்திற்கு முந்திய பிறந்த நாளாக நண்பர்களுடன் கொண்டாடினார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/73899.html
அமெரிக்காவின் அனுமதியின்றி ஈரானிய மசகு எண்ணெய் இலங்கைக்குள்
அமெரிக்காவினால் அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலான மசகு எண்ணெயை மூன்றாந் தரப்பின் மூலம் ஈரானிடம் இருந்து சிறிலங்கா வாங்கியுள்ளதை சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.
மலேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா கப்பல் கூட்டுத்தாபனம் சீனாவிடம் இருந்து கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளது குறித்து எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, எண்ணெய் இறக்குமதி மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கு, கப்பல்கள் தேவைப்படுவதாகவும், அதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்போதே, மூன்றாந்தரப்பின் மூலம் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை ஈரானிய மசகு எண்ணெய் சுத்திகரிப்புக்கென்றே உருவாக்கப்பட்டது என்றும், இதனால் மூன்றாவது தரப்பின் மூலம் வாங்குவதை விட வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா அரசாங்கம் மூன்றாந்தரப்பின் மூலம் ஈரானிய மசகு எண்ணெய் வாங்கிதற்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதையடுத்து சிறிது காலம், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்த சிறிலங்கா மீண்டும் ஈரானிய மசகு எண்ணெயை இரகசியமாக வாங்கி வருகிறது.
http://www.jvpnews.com/srilanka/73905.html
நீ ஒரு இனவாதி என திட்டி ரிசாத்துடன் மகிந்த சண்டை
அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் குறித்து அலசப்பட்டது.
இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியை நோக்கி 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன
இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார்.
அப்போது ஜனாதிபதி அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து, நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல், இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் நீங்கள் அப்படி கூறக் முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார்.
இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து. வாயைப் பொத்து என்று உரத்து சத்தம் இட்டு, நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி, உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன் என சீறிப்பாய்ந்தார்.
இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது.
இந்த வேளை அமைச்சர் ரிசாத்தை நோக்கி கை நீட்டிய சம்பிக்க ரணவக்க பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார்.
இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கின்றதா எனக் கேட்டார்.
எநதவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார். இதன் பிற்பாடு அமைச்சரவை கலைந்தது.
http://www.jvpnews.com/srilanka/73902.html
Geen opmerkingen:
Een reactie posten