தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பிரதியமைச்சரிடம் விசாரணை,அமைச்சர் ரிசாத்தின் அலுவலகத்தை பொதுபல சேனா முற்றுகையிட்டபோது கமெராக்கள் செயலிழந்து விட்டன?



விளம்பரம் மூலம் பல பெண்களை துஸ்பிரயோகம் செய்த காதல் மன்னன் கைது
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 12:51.50 PM GMT ]
திருமணம் முடிப்பதாகக் கூறி, பெண்ணொருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை திருமணம் முடிப்பதாக கூறி கடந்த 31 ம் திகதி நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்து தங்க ஆபரணங்களை அபகரித்து, குறித்த பெண்ணை  அந்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு சென்ற நபரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை இன்று மாலை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேனவிடம் ஆஜர்ப்படுத்தியபோது, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதமான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர், பெண்களை திருமணம் செய்வதாக கூறி பத்திரிகைகளுக்கு மணமகள் தேவை என விளம்பரம் பண்ணி மீண்டும் அதற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி மூலம் தொடர்பு வைத்து பிறகு சந்தித்து இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தையின் தகப்பனான இவர், இவ்வாறான சம்பவங்கள் பற்றி நானுஒயா பொலிஸில் 2 முறைபாடுகளும் கொத்மலை பொலிஸில் 1 முறைபாடும் நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கடந்த மாதம் கொழும்பில் ஒரு பெண்ணை கடத்தி ஹட்டனில் கட்டி வைத்த சம்பவத்திற்கும் மேற்படி சந்தேக நபர்க்கும் சம்பந்தம் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சந்தேக நபரோடு மேலும் சில நபர்கள் இருப்பதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZep1.html



அமைச்சர் ரிசாத்தின் அலுவலகத்தை பொதுபல சேனா முற்றுகையிட்டபோது கமெராக்கள் செயலிழந்து விட்டன?
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 01:24.17 PM GMT ]
அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அலுவலகத்தை பொதுபல சேனா இயக்கம் முற்றுகையிட்டபோது, அங்கு பெருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராக்கள் செயலிழந்து விட்டதாக இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா இயக்கம், வட்டரக்க விஜித்த தேரரை அமைச்சர் ரிசாத் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 23ம் திகதி காலையில் அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம், சம்பவம் தொடர்பான காணொளிகள் அடங்கிய சி.டிக்களை வழங்குமாறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.
3 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொழும்பு 3ல் அமைந்துள்ள அமைச்சுக் காரியாலயத்தின் மீது பொதுபல சேனா அமைப்பின் பிக்குகள் அத்து மீறி பிரவேசித்த போது, கமெராக்கள் தொழிற்படவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை நடாத்துமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
பொதுபல செனா அமைப்பின் பிக்குகள் அனுமதியின்றி அமைச்சுக்குள் புகுந்து அமைச்சின் அறைகளில் வட்டரட்ட தேரர் இருக்கின்றாரா என தேடியதாக அமைச்சின் மேலதிக செயலாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZep3.html
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பிரதியமைச்சரிடம் விசாரணை
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 01:46.33 PM GMT ]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பிரதியமைச்சர் ஹேமால் குணசேகரவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தி, அவர் பயணம் செய்த வாகனத்தை தீயிட்டு கொளுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தரான சுமிந்த சமன் என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டிருந்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரரும் சகோதரியும் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தரும் அமெரிக்காவில் குடியேற வீசா பெற்றுக் கொள்ள விண்ணம் செய்திருந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது.
30 லட்ச ரூபா சொத்துக்களை காண்பிக்க முடியாத காரணத்தினால் பொலிஸ் உத்தியோகத்தரின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரதி அமைச்சரின் ஆதாரவாளர்களே தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZep5.html

Geen opmerkingen:

Een reactie posten