தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 juni 2014

சூடுபிடிக்கும் “13+” சட்ட சர்ச்சைகள் நீங்குமா??

பிள்ளைகள் பெறுவதில் சிக்கலா?? என்னிடம் அறிவிக்கவும்! மேர்வின்

சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறி வருகிறது என்று கூறி கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் முடிந்தளவு பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுமாறும், அதில் பிரச்சினைகள் இருந்தால் தனக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
கட்டை பைக்குள் போட்டு கொள்ளும்படி பணத்தை சம்பாதிக்க முடியாது போகும் போது சிலர் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரம் முயற்சித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பிரதேச சபை முதல் அனைவரும் அதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.
எவர் எதனை கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது ஒரு குடும்பம் போன்றது. அதில் தாய் மற்றும் தந்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
இந்த குடும்பத்தை பிரிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதியின் குடும்பத்தினர் மற்றும் பொலியத்தையில் இருந்து வந்த என்னை தவிர ராஜபக்ஷ குடும்பத்தினர் பற்றி அறிந்தவர்கள் எவரும் இல்லை எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/72080.html

சூடுபிடிக்கும் “13+” சட்ட சர்ச்சைகள் நீங்குமா??

13ஆவது திருத்­த­ச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, அதற்கு அப்பால் சென்று அதி­கா­ரங்­களை பகிர்­வது ஆகிய இரண்டு விட­யங்­க­ளுக்கும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி முக்­கி­யத்­துவம் கொடுத்து வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.
அதுவும் விரை­வாக இதற்­கான பணி­களை முன்­னெ­டுக்­கு­மாறும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.
நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பின் போது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ­விடம் 13ஆவது திருத்­தச்­சட்டம் குறித்தும், மீனவர் பிரச்­சினை குறித்தும் கேள்­விகள் எழுப்­பப்­ப­டலாம் என்று முன்­கூட்­டியே எதிர்­பார்க்­கப்­பட்­டது தான்.
அதையும் தாண்டி, நரேந்­திர மோடி முதல் சந்­திப்­பி­லேயே, 13ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து கூடு­த­லாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­கி­றது. அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் 13ஆவது திருத்­தச்­சட்டம் என்ற பேச்சைக் கையில் எடுப்­ப­தையே விரும்­ப­வில்லை.
ஏனென்றால், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தானால், மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகர்ந்­த­ளிக்க வேண்­டிய நிலை வந்துவிடும் என்று கரு­து­கி­றது. அதற்­காக, 13ஆவது திருத்­தச்­சட்டம் என்­பது, ஏதோ அதி­கா­ரங்­களை அள்ளிக் கொடுக்கும் அட்­சய பாத்­திரம் என்று கரு­து­வ­தற்­கில்லை.
அது ஓர் ஓட்டைப் பாத்­திரம் தான் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்­னேஸ்­வரன் ஒரு சந்­தர்ப்­பத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.
அவ்­வா­றான ஓட்டைப் பாத்­தி­ரத்தை – ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கும் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குக் கூட அர­சாங்கம் தயா­ராக இல்லை. மாகா­ணங்­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு விட்டால், அவை தனி­நா­டு­க­ளாக உரு­வெ­டுத்து விடும் என்ற பிரமை ஒன்று தெற்­கி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான நிலையில், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளித்தால், சிங்­கள மக்­களின் கோபத்­துக்கு இரை­யாக நேரிடும் என்ற பயமும் அர­சாங்­கத்­துக்கு உள்­ளது.
இந்த அர­சாங்கம் தெற்­கி­லுள்ள சிங்­கள பௌத்த தேசி­ய­வா­திகளின் ஆத­ர­வையே அதிகம் நம்­பி­யுள்­ளது. குறிப்­பிட்ட சில முற்­போக்கு சக்­திகள் அர­சாங்­கத்­துடன் இணைந்­தி­ருந்­தாலும், சிங்­கள, பௌத்த அடிப்­ப­டை­வா­திகள் தான் அர­சாங்­கத்­துக்கு பல­மாக இருந்து வந்­தி­ருக்­கின்­றனர்.
ஆனால், அந்த அடிப்­ப­டை­வா­தி­க­ளி­னது ஆத­ரவைக் கூட இப்­போது அர­சாங்கம் இழக்கத் தொடங்­கி­யுள்ள நிலையில் தான், நரேந்­திர மோடியின் அர­சாங்கம் இந்­தி­யாவில் பத­விக்கு வந்­துள்­ளது.
நரேந்­திர மோடி பத­விக்கு வந்­த­வு­ட­னேயே, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அழுத்­தங்­களைக் கொடுக்கத் தொடங்­கி­யி­ருப்­பது அர­சாங்­கத்­துக்கு சிக்­க­லையே ஏற்­ப­டுத்தப் போகி­றது.
ஏனென்றால், அர­சாங்க கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களில் ஒரு பகுதி 13ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு ஆத­ர­வா­னவை. இன்­னொரு பகுதி எதிர்ப்­பா­னவை.
ஏற்­க­னவே, அமைச்­சர்கள் ராஜித சேனா­ரத்ன, வாசு­தேவ நாண­யக்­கார, திஸ்ஸ விதா­ரண, டியூ குண­சே­கர, நவீன் திச­நா­யக்க உள்­ளிட்ட பலரும், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
ஆனால், விமல் வீர­வன்ச, சம்­பிக்க ரண­வக்க, தினேஷ் குண­வர்­தன போன்ற கடும் போக்கு அமைச்­சர்கள், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று கோரி வரு­கின்­றனர்.
இந்த நிலையில் நரேந்­திர மோடி 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­ முறைப்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்த ஆரம்­பித்­துள்­ளது, அர­சாங்­கத்தை முடி­வெ­டுக்க முடி­யாத குழப்பம் ஒன்­றுக்குள் தள்­ளி­விடக் கூடும்.
அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் மட்­டு­மன்றி, அதற்கு வெளியே உள்ள சிங்­கள, பௌத்த கடும் போக்கு அமைப்­புகள் பலவும் கூட, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்றே வலி­யு­றுத்­து­கின்­றன.
இந்த அமைப்­பு­க­ளுக்­கெல்லாம், நரேந்­திர மோடியின் வலி­யு­றுத்­தலால் உதறல் எடுக்க ஆரம்­பித்­துள்­ளது. ஏனென்றால், அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்து, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இந்­தியா நடை­மு­றைப்­ப­டுத்தச் செய்து விடுமோ என்ற கலக்கம் அவர்­க­ளுக்கு உரு­வெ­டுத்­துள்­ளது. மன்­மோ­கன்சிங் மெது­வாக காலை வைத்தார், நரேந்­திர மோடி வேக­மாக காலை வைத்­துள்ளார் என்று எச்­ச­ரித்­துள்ள தேசப்­பற்று தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­யலர் வசந்த பண்­டார, உட­ன­டி­யாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு சாவு­மணி அடிக்­கப்­பட வேண்டும் என்றும் கூறி­யுள்ளார்.
அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்ற அழுத்­தங்­களும், குரல்­களும் இனித் தெற்கில் தீவி­ர­ம­டையக் கூடும். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கமும் கூட, 13ஆவது திருத்­தச்­சட்டம் ஒழிக்­கப்­ப­டு­வ­தையே விரும்­பு­கி­றது.
ஆனால், அது இந்­தி­யாவின் பகையை தேடித்­தந்து விடும் என்­பதால் தான், 13ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மீது கை வைக்­காமல் – அதே­வேளை, அந்த திருத்­தச்­சட்­டத்தின் மூலம் மாகா­ண­ச­பை­க­ளுக்கு பகி­ரப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­க­ளையும் வழங்­காமல், அர­சாங்கம் இழுத்­த­டித்து வரு­கி­றது,
இது­வரை இந்­தி­யாவில் வலு­வான ஓர் அர­சாங்கம் இல்­லா­ததால், இலங்கை அர­சாங்­கத்தின் இந்த இழுத்­த­டிப்பு உத்­தியை அது கண்­டு­கொள்­ள­வில்லை. ஆனால், நரேந்­திர மோடி அர­சாங்கம் வலு­வான அர­சாங்­க­மாக உரு­வா­கி­யுள்­ள­தாலும், வலி­மை­யான இந்­தி­யாவை உரு­வாக்கும் கொள்­கையைக் கொண்­ட­தாக இருப்­ப­தாலும், இந்­தி­யா­வி­னது கருத்து உதா­சீனம் செய்­யப்­ப­டு­வதை தமக்­கான சவா­லா­கவே கருதும்.
அதா­வது, இந்­தி­யா­வுக்கு சவால் விடும் வகையில், இலங்கை செயற்­ப­டு­வ­தாக இந்­திய அர­சாங்கம் உணர்ந்து கொண்டால், அது இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆபத்­தாக முடியும்.
ஏற்­க­னவே மன்­மோ­கன்சிங் அர­சாங்கம் நிலை­யான அர­சியல் தீர்வு மற்றும் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வலி­யு­றுத்­திய போது தான், அந்த சவாலைச் சமா­ளிப்­ப­தற்கு, அர­சாங்கம் தெரி­வுக்­கு­ழுவைக் கையில் எடுத்­தது. தெரி­வுக்­கு­ழுவில் வைத்து, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­பதே அர­சாங்­கத்தின் இலக்­காக இருந்­தது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் அதில் இணைந்­து­கொள்ள மறுத்து விட, ஐ.தே.க.வும் அதையே கார­ண­மாகக் கூறி, தெரி­வுக்­கு­ழுவில் இணைந்து கொள்­ள­வில்லை.
இதனால், சட்­ட­ரீ­தி­யாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை செய­லி­ழக்க வைக்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோல்­வியில் முடிந்­தது.
இப்­போதும் கூட, அர­சியல் தீர்வு என்ற பெயரில் தெரி­வுக்­கு­ழு­வுக்குள் கூட்­ட­மைப்பை இழுத்து வந்து, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கே அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது.
எதிர்க்­கட்­சிகள் தான் அதற்குப் பிடி­ கொ­டுக்­காமல் நழுவிக் கொண்­டி­ருக்­கின்­ றன. இந்த நிலையில், நரேந்­திர மோடி அர­சாங்கம் 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வலி­யு­றுத்­தி­யுள்­ளதும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்த தாம் முழு ஆத­ரவு அளிப்போம் என்று பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐ.தே.க. அறி­வித்­துள்­ளதும், அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டியைக் கொடுக்கப் போகி­றது. ஏனென்றால், பிர­தான எதிர்க்­கட்­சியே ஆத­ர­வ­ளிக்கும் போது, அர­சாங்கம் அதனைச் செயற்­ப­டுத்­தலாம் என்று இந்­தியா கூற முனையும்.
ஆனால், சிங்­களத் தேசி­ய­வா­தி­க­ளி­னது விருப்பம் அதற்கு எதிர்­மா­றா­ன­தாக இருப்­பதால், யாரு­டைய விருப்­பத்தை நிறை­வேற்­று­வது என்ற சிக்கல் அர­சாங்­கத்­துக்கு ஏற்­படும்.
போர் முடிந்து விட்ட நிலையில், போரை வைத்தோ அதில் பெற்ற வெற்­றியை வைத்தோ, புலி­களை வைத்தோ அர­சியல் நடத்த முடி­யாது. அந்த நிலை மாறி விட்­டது.
எனவே, புதி­ய­தொரு விவ­கா­ரத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­சியல் நடத்­தினால்தான் பிழைத்துக் கொள்­ளலாம் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. இப்­ப­டி­யான நிலையில், அர­சாங்­கத்­துக்குள் இருக்கும் கடும்­போக்கு சக்­திகள் அரசின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பை வெளி­யிடத் தொடங்கிவிட்­டன. அவர்­க­ளுக்கு நரேந்­திர மோடியின் அழுத் தம் புதிய உற்­சா­கத்தைக் கொடுக்கும். 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க வலி­யு­றுத்தி அவர்கள் போராட்­டத்தை தொடங்­கலாம்.
அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வானால், அர­சாங்கம், தான் யார் பக்கம் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்கும். ஏனென்றால், 13ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு தான் ஆத­ரவு என்றோ எதிர்ப்பு என்றோ அர­சாங்கம் இது­வரை கூற­வில்லை.
ஆனால், அதை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்­பதில் உறு­தி­யாக இருக்­கி­றது. முன்னர், இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் மற்றும். இந் திய வெளி­வி­வ­கார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா ஆகி­யோ­ரிடம் மட்­டு­மன்றி இப்­போ­தைய இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா ஸ்வரா­ஜிடம் கூட, 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும், அதற்கு அப்பால் செல்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. ஆனால், பின்னர் அவ்வாறு எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் நிராகரித்திருந்து.
இந்தநிலையில், இப்போது கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கொடுத்த அழுத்தம் குறித்து அரசாங்கம் வாய்திறக்க வில்லை. இதிலிருந்து, அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் இன்னமும் இந்தியாவுடன் விளையாடலாம் என்றே நினைக்கிறது போலும்.
ஆனால், நரேந்­திர மோடி அர­சாங்கம், அதற்கு இடம்­கொ­டுக்­காது என்றே கரு­தப்­ப­டு­கி­றது. இந்­த­நி­லையில் 13ஆவது திருத்­தச்­சட்டம் என்­பது, வரும் நாட்­களில் தீவி­ர­மான சர்ச்­சை­யாக இலங்கை அர­சி­யலில் உரு­வெ­டுக்கும் வாய்ப்­புகள் தோன்­றி­யுள்­ளன.
13ஆவது திருத்­தச்­சட்டம் மாகா­ண­ச­பை­க­ளுக்கோ தமி­ழ­ருக்கோ முழு­மை­யான அதி­கா­ரங்­களை அளிக்கக் கூடி­ய­தொன்­றாக இல்­லா­விட்­டாலும், இதன் மூலம் உரு­வாக்கக் கூடிய கலகம், ஒருவேளை தமிழருக்கு கொஞ்சமேனும் நன்மையளிப்பதாக அமை யக்கூடும்.
-ஹரி­கரன்-
http://www.jvpnews.com/srilanka/72093.html

Geen opmerkingen:

Een reactie posten