[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:16.09 PM GMT ]
தனது கையெழுத்தில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ள ஜனாதிபதி, மரணமடைந்த அமைச்சரின் சேவைகளை பாராட்டுவதாக கூறியுள்ளார்.
இந்திய அமைச்சர் கோபிநாத் முண்டே நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் கொல்லப்பட்டார்.
தூரநோக்கம் கொண்ட தலைவர் என்ற முறையில் அமைச்சர் கோபிநாத், தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்தவர் என ஜனாதிபதி தனது அனுதாப கடிதத்தில் கூறியுள்ளார்.
மோடியின் பதவியேற்பின் போது அமைச்சர் கோபிநாத் முண்டேவை சந்தித்தமை தொடர்பில் நினைவுப்படுத்தியுள்ள ஜனாதிபதி, அவரது இறப்பு தொடர்பில் ஆழ்ந்த அனுதாபங்களை மோடிக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZep6.html
டெங்கு நோயை அரசாங்கத்தினால் மட்டும் ஒழிக்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:29.27 PM GMT ]
டெங்குவை இல்லாமல் செய்யும் பொறுப்பினை அரசாங்கத்தின் மீது மட்டும் சுமத்த முடியாது.
டெங்கு தொற்றை இல்லாமல் செய்வதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
அரசாங்கத்தின் மீது மட்டும் குற்றம் சுமத்திவிட்டு இருப்பதனால் டெங்கு பரவுவது நின்று விடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் இன்று நடைபெற்ற சுற்றாடல் தின தேசிய நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் டெங்கு ஒழிப்பில் கவனம் செலுத்துவதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZep7.html
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
[ வியாழக்கிழமை, 05 யூன் 2014, 02:40.55 PM GMT ]
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கடிக்கப்பட்டதுடன் மற்றொரு படகு சேதமாக்கப்பட்டது.
அத்துடன் தமிழக மீனவர்கள் பிடித்த இறால்களையும் இலங்கை கடற்படையினர் அள்ளிச்சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட 32 தமிழக மீனவர்கள் இன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கரையோர காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGTZLZeqy.html
Geen opmerkingen:
Een reactie posten