இணைய தளங்கள் முடக்கப்படுவதன் மூலம் மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை மறுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எட்டு இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சில இணைய தளங்களில் கடமையாற்றிய ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையில் இணைய தளங்கள் முடக்கப்படவில்லை.
தொலைத்தொடர்பு கட்டு;ப்பாட்டு ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இணைய தளங்கள் முடக்கப்பட்டதன் மூலம் மக்களின் தகவல் அறிந்து கொள்ளு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. மக்கள் தகவல்களை பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை தடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது – மங்கள சமரவீர
இணைய ஊடகங்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகங்களின் முடக்கம் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள இணைய தளங்கள் பயங்கரவாத இணைய தளங்கள் அல்ல.
சில இணைய தளங்களின் அலுவலகங்கள் இரகசிய பொலிஸாரினால் சோதனையிடப்பட்டது.
ஓர் இணைய தள நிறுவனத்தில் தேனீர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிற்றூழிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவினால் இணைய தளங்களை முடக்க முடியாது என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTbLZex0.html
Geen opmerkingen:
Een reactie posten