[ வெள்ளிக்கிழமை, 06 யூன் 2014, 11:43.38 PM GMT ]
இந்த புகைப்படத்தில் ராஜபக்ச, இ;ந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உப ஜனாதிபதி ஹமீட் கர்சாய், பிரதமர் மோடி மற்றும் சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த படத்தின் கீழ், எழுதப்பட்டுள்ள சுருக்கக்குறிப்பில் நேற்று ராஸ்டிரபதி பவனில் இடம்பெற்ற இந்திய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய பிரதமர், ஜனாதிபதி உப ஜனாதிபதி ஆகியோர் அழைக்கப்பட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே26 ஆம் திகதியன்று பிரசுரிக்கப்பட்ட இந்த படம் ஜூன் 3 ஆம் திகதி மாற்றப்பட்டது.
எனினும் தற்போது மீண்டும் அந்தப்படம் இலங்கை ஜனாதிபதியின் டுவிட்டர் மற்றும் முகநூல் அறிமுகப் படத்தில் காணப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyGTaLZew3.html
தனிப்பட்ட கொள்கைக்காக நடத்தப்படும் இணையத்தளங்கள் தடைசெய்யப்படும்!- அரசாங்கம்
[ சனிக்கிழமை, 07 யூன் 2014, 12:38.14 AM GMT ]
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
இணையத்தளங்களை தடைசெய்வது தொடர்பான விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
ஒழுக்கமுள்ள சமூகம் ஒன்றுக்கு இடையூறாக உள்ள இணையத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கான கலந்துரையாடலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினரும் முன்வரவேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
சில இணையத்தளங்கள், ஒருவர் மீது சேறு பூசுவதற்கும் முறையற்ற காதல் விவகாரங்களை வெளிப்படுத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட பல இணையத்தளங்கள் தடைசெய்யப்படுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விவாதத்தை கோரியிருந்தார்.
இந்தநிலையில் இன்றைய விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர, இணையத்தளங்கள் தடைசெய்யப்படுகின்ற செயலுக்கு கெஹலிய ரம்புக்வெல்ல காரணம் அல்ல.
அதிகாரம் மிக்க ஒருவரே இந்த செயலுக்கு பின்னால் இருப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர், தமது உரையின்போது ஐக்கிய தேசியக் கட்சியினரே குற்றவாளிகளாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyGTbLZew7.html
Geen opmerkingen:
Een reactie posten