தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 juni 2014

வன்முறையை தூண்டியது மதகுரு ஆற்றிய உரையே!- பாராளுமன்றில் சம்பந்தன்



ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள போட்டிக்கு மலையக இளைஞன் தெரிவு
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:25.33 AM GMT ]
இலங்கையின் விளையாட்டுத்துறையில் பல்லின மக்கள் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கின்ற போதிலும் மலையகபகுதியில் விளையாட்டுத்துறையில் கலந்துக்கொள்ளும் இளைஞர் யுவதிகள் மத்தியில் ஆர்வம் குறைந்தே காணப்படுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் அதுவும் அக்கரப்பத்தனை பிரதேசத்தில் அதிகமான விளையாட்டு வீரர்கள் இருக்கின்ற போதிலும் ஒரு சிலரே வாய்ப்பு வசதிகளை பயன்படுத்திக் கொண்டு விளையாட்டுதுறையில் சாதனைபடைப்பவர்களாக மாறுகின்றனர்.
அண்மைக்காலமாக அக்கரப்பத்தனை பிரதேசத்தில் விளையாட்டுத்துறை மங்கிய போதிலும் இப்பிரதேசமக்களின் மதிப்பையும் கௌரவத்தையும் மண்னையும் கௌரவிக்கும் வகையில் சாதனை படைப்பவராக ஹோல்புறுக் சின்னத்தோட்டத்தை சேர்ந்த பாலகிருஸ்ணன் பல்வேறுப்பட்ட விளையாட்டுத்துறையில் கலந்துக் கொண்டு பிரதேசத்துக்கு பெருமை சேர்த்து வருகின்றார்.  இவர் சீடி தொழிற்சாலையில் தொழில் புரிந்தாலும் தொழிற்சாலையும் தனக்கென்று நற்பெயரை பதித்துள்ளார்.
இவரின் முயற்சிக்கு வித்திடும் வகையில் தொழிற்சாலை நிர்வாகமும் ஒருபோதும் கைவிட்டதில்லை.  இவரின் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கும் உதவியே இவரின் வளர்சிக்கு முக்கிய பங்காக காணப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்கையில் இவரின் குடும்பத்தினர் இவரின் விளையாட்டுத்துறைக்கு அதிகபங்களிப்பை வழங்கி வருகின்றனர்.  இவருடைய வளர்சிபாதையை பார்கின்றபோது 13 வயதில் கரப்பந்தாட்ட விளையாட்டில் ஆரம்பித்த இவர் இன்று அனைவரும் அறியும் வகையில் மெய்வல்லுனர் போட்டி மற்றும் அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டி சம்மேளனத்தின் நடுவராகவும், செயல்பட்டுவருகின்றார்.
அதுமட்டுமன்றி மத்திய மாகாண விளையாட்டுதுறை அமைச்சு அனுசியா சிவராஜா ஊடாக இந்தியா நேருவிளையாட்டு அரங்கில் 2010ம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுதுறைக்கான பயிற்சி முகாமில் பங்குபற்றினார்.
இவருடைய வெற்றிக்கிண்ணங்களை பார்க்கின்றபோது 100க்கு மேற்பட்ட கிண்ணங்களும் பதக்கங்களும்,சான்றிதழ்களும் பெற்றிருக்கின்றமைமற்றுமொரு சான்றாகும். கடந்த 14, 15ம் திகதிகளில் தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் நீளம் பாய்தல், முற்பாச்சல் ஆகிய போட்டிகள் கடுமையாக நடைபெற்ற போதிலும் இவர் பங்கு பற்றி நீளம் பாய்தலில் 1ம் இடத்தையும், முற்பாய்சலில் 2ம் இடத்தினையும் பெற்று மலையக சமூகத்திற்கும் அக்கரப்பத்தனை பிரதேசத்துக்கும் பெருமை தேடிதந்த இவர் எதிர் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள 45, 50 வயதிற்கு இடைப்பட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குப்பற்றவுள்ளார்.
என்பது பெருமைக்குரிய விடயமாகும். இவர் ஹோல்புறுக் த.ம.வி பழைய மாணவராவார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagq7.html
வன்முறையை தூண்டியது மதகுரு ஆற்றிய உரையே!- பாராளுமன்றில் சம்பந்தன்
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:40.22 AM GMT ]
இந்த நாட்டின் பொலிஸ் படையும், ஆயுதப் படைகளும் சிங்களமே என்று மதகுரு சூளுரைத்துப் பேசியமையே   வன்முறையைத் தூண்டியது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊர்வலத்தின் போதே முஸ்லிம்கள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டனர்.  இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பேருவளை, அளுத்கம நிலைமை குறித்து கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் நீண்ட உரை ஒன்றை இரா.சம்பந்தன் எம்.பி. ஆற்றினார் என்பது தெரிந்ததே. அதன் முடிவிலேயே அவர் விடயத்தை நேரடியாகப் போட்டுடைத்தார்.
இதுதொடர்பில் அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
என்னுடைய உரையை முடிப்பதற்கு முன்னர் மனித உரிமைகள் விவகாரத்தோடு சம்பந்தப்படுகின்ற அளுத்கம, பேருவளை, தர்கா நகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சில விடயங்களைக் குறிப்பிட அனுமதிக்கும்படி வேண்டுகிறேன்.
சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அத்தோடு விடயம் முடிந்துவிட்டது.
வணக்கத்துக்குரிய மதகுரு ஒருவரின் பேச்சின் வீடியோப் பதிவை நான் பார்த்தேன். கடும் சொற்பிரயோகங்கள் கொண்ட பேச்சு அது; வன்முறையைத் தூண்டும் மிக மோசமான பேச்சு, வன்முறையை நாடும் படி மக்களைத் தூண்டும் பேச்சு.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்திய அந்தப் பேச்சில் இந்த நாட்டின் பொலிஸ் படையும் ஆயுதப் படையும் சிங்களப் படைகள் என்று கூறப்பட்டது.
அதிகளவில் மக்கள் கூட்டப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் இந்தப் பேச்சைத் தொடர்ந்து பலத்த கைதட்டலுடன் அதற்கு வரவேற்பளிக்கப்பட்டது, தொடர்ந்து ஊர்வலம் ஒன்று நடந்தது. அந்த ஊர்வலம் நடக்கையில் கடைகள் தாக்கப்பட்டன, வீடுகள் தாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, மக்கள் தாக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தனர். இருவர் உயிரிழந்தனர். முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
அப்போது, சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகள் ஏன் வாளாவிருந்தனர்? அவர்கள் ஏன் செயலிழந்து நின்றனர்? அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தொழிற் சங்க உரிமைகளையோ, சம்பவத்தையோ வேதனத்தையோ கோரி தொழிலாளர் ஊர்வலம் போவதற்குக் கூட நீங்கள் தடை விதிக்கின்றீர்கள்.
பல்கலைக்கழகத்தில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்புச் செய்து எதிர்ப்புக் காட்டுவதைக் கூட நீங்கள் தடுக்கின்றீர்கள். அப்படியாயின் இந்த ஊர்வலத்தை மட்டும் நீங்கள் ஏன் தடுக்கவில்லை?
இந்த ஊர்வலம் தடுக்கப்படக்கூடாது என்பது அரசின் தீர்மானமா? சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் வேண்டுமென்றே தமது கடமையைத் தளர்த்தி நின்றார்களா? தங்களுடைய பொறுப்பை ஆற்றாமல் அந்தக் கூட்டத்தினர் தங்களின் கைவரிசையைக் காட்டுவதற்கு இடமளித்து நின்றார்களா? இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்குப் பதில் வேண்டும்.
இந்த நாட்டின் ஒரு பிரஜை, அவன் என்ன இனத்தைச் சேர்ந்தவன் என்ற வேறுபாடில்லாமல் அவனுக்கான பாதுகாப்பை அளிப்பதற்கு சட்டத்தின் பாதுகாப்பு எதுவரை வழங்கப்படும் என்பதில் அரசின் திட்டவட்டமான, தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை நாம் அறிய விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRVLagry.html

Geen opmerkingen:

Een reactie posten